நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

2022-23 ரபி சந்தைப் பருவத்தில் (01.05.2002 வரை) 161.95 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை 11 மாநிலங்களில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது

01.05.2022 வரை 760.94 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது

Posted On: 02 MAY 2022 4:44PM by PIB Chennai

மத்தியப் பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், சண்டிகர், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு – காஷ்மீர், குஜராத், பீகார், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ரபி சந்தைப் பருவம் 2022-23-ல் மத்திய தொகுப்பின் கீழ் கோதுமை கொள்முதல் அதிகரித்துள்ளது.

01.05.2022 வரை, 161.95 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டது. இதன் மூலம் குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.32,633.71 கோடியுடன் 14.70 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் பயனடைந்துள்ளனர்,

2021-22 கரிஃப் சந்தைப் பருவத்தில் மத்திய தொகுப்பின் கீழ் நெல் கொள்முதல் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சீராக நடைபெற்று வருகிறது.

01.05.2022 வரை, 760.94 லட்சம் மெட்ரிக் டன் நெல் (கரிஃப் பயிர் 751.49 லட்சம் மெட்ரிக் டன் மற்றும் ரபி பயிர் 9.45 லட்சம் மெட்ரிக் டன் உட்பட) கொள்முதல் செய்யப்பட்டுள்ளது, இதன் மூலம் குறைந்த பட்ச ஆதரவு விலை ரூ.1,49,144.23 கோடியுடன்,109.58 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில், 2021-22 கரிஃப் சந்தைப் பருவத்தில் 33,40,314 மெட்ரிக் டன்  நெல் கொள்முதல் செய்யப்பட்டது.  ரூ.6547.02 கோடி குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் 500057 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

புதுச்சேரியில் 336 டன் நெல்  கொள்முதல் செய்யப்பட்டு 0.66 கோடி குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் 84 விவசாயிகள் பயடைந்துள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1822021

-----

 



(Release ID: 1822068) Visitor Counter : 122


Read this release in: English , Urdu , Hindi , Manipuri