அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும், 2070க்குள் கரியமில வாயு வெளியேற்றம் இல்லாத நிலையை எட்டுவது என COP 26 மாநாட்டில் அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படும் எனவும் இந்தியா மீண்டும் உறுதியளித்துள்ளது

Posted On: 02 MAY 2022 4:29PM by PIB Chennai

சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும், 2070க்குள் கரியமில வாயு வெளியேற்றம் இல்லாத நிலை எட்டப்படும் என்று COP 26 மாநாட்டில் அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படும் என இன்று மீண்டும் உறுதியளித்துள்ள இந்தியா, இதனை எட்டுவதற்காக தேசிய ஹைட்ரஜன் எரிசக்தி இயக்கம் மற்றும் அதுபோன்ற பல முன்முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது.

 தமது ஜெர்மனி பயணத்தின் 2-ம் நாளான இன்று மத்திய அறிவியல் தொழில்நுட்பம், புவி அறிவியல் (தனி பொறுப்பு), அணுசக்தி, விண்வெளி மற்றும் பிரதமர் அலுவலக இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், ஜெர்மன் நாட்டின் சுற்றுச்சூழல், இயற்கை பாதுகாப்பு, அணுசக்தி பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அமைச்சர் திருமதி ஸ்டெபி லெம்கே-வை  சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.  இந்தியா- ஜெர்மனி அரசுகளுக்கிடையிலான ஆணையத்தின் ஒரு பகுதியாக இந்த சந்திப்பு நடைபெற்றது.

பருவநிலை மாற்றம் உயிர்ப்பண்மை, ஆழ்கடல் மற்றும்  சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான செயற்கை நுண்ணறிவு போன்றவற்றை பின்பற்றுவது குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

பருவநிலை மற்றும் தட்பவெட்பம் சார்ந்த அம்சங்கள் குறித்த எதிர்கால சவால்களை கருத்தில் கொண்டு, இந்தத்துறையில் மாதிரி வளர்ச்சிக்கான ஒத்துழைப்பு, புதுப்பிக்கத்தக்க எதிர்சக்தி தொடர்பான முன்னறிவிப்பு பயன்பாடு மற்றும் செயற்கை நுண்ணறிவு /இயந்திர கற்றல் போன்ற துறைகளில் இரு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்த இந்தியா ஆர்வமுடன் இருப்பதாக தெரிவித்தார். இருதரப்பு ஒத்துழைப்பின் நிலையான தூணாக அறிவியல் தொழில்நுட்பம் உள்ளதாக குறிப்பிட்ட அவர், தட்பவெட்பம் மற்றும் பருவநிலை ஆராய்ச்சி, குறிப்பாக பிராந்திய பருவநிலை உச்சம் மற்றும் வெப்பமண்டலம் மற்றும் உயர் – அச்சரேகை உள்ளிட்ட அம்சங்களில் இருதரப்பு அறிவியல் ஒத்துழைப்பை மேற்கொள்வதற்கான வாய்ப்புகளை ஆராயலாம் என்றும் தெரிவித்தார்.

ஐதராபாத்தில் உள்ள ஆழ்கடல் தகவல் சேவைக்கான இந்திய தேசிய மையத்தில் உள்ள இந்திய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் அளிக்கும் சுனாமி சார்ந்த தகவல்கள் இந்தியப் பெருங்கடல் வளையத்தில் உள்ள நாடுகளுக்கு வழங்கப்படுவதாகவும் திரு ஜிதேந்திர சிங் ஜெர்மன் அமைச்சரிடம் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு  இதன் ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1822016

 ***************



(Release ID: 1822049) Visitor Counter : 166


Read this release in: English , Urdu , Hindi , Telugu