புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2021-22 நிதியாண்டில் ஐஆர்இடிஏ வரலாற்று சிறப்பு மிக்க வருடாந்திர செயல்திறனை பதிவு செய்துள்ளது

प्रविष्टि तिथि: 01 MAY 2022 6:30PM by PIB Chennai

இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை ( ஐஆர்இடிஏ), முன் எப்போதும் இல்லாத அளவுக்கு லாபம் ஈட்டி வரலாற்று சாதனை படைத்துள்ளது. 2021-22 நிதியாண்டில் இரண்டாவது மற்றும் மூன்றாவது கொரோனா பெருந்தொற்று அலைக்கு இடையே, வரிக்குப் பிந்தைய வருடாந்திர ஆதாயமாக ரூ.634 கோடியை ஈட்டியுள்ளதுடன், வரிக்கு முந்தைய லாபமாக ரூ.834 கோடி ஈட்டியுள்ளது. 2020-21 நிதியாண்டின் 46.41% வளர்ச்சியை விஞ்சி, கடந்த நிதியாண்டில் 82.88% வளர்ச்சியை அது பதிவு செய்துள்ளது.

ஐஆர்இடிஏ-வின் இயக்குநர்கள் குழு 2021-22-ம்  நிதியாண்டுக்கான தணிக்கை செய்யப்பட்ட நிதி முடிவுகளை இன்று நடைபெற்ற கூட்டத்தில் அங்கீகரித்தது, அதே நேரத்தில் சவாலான சூழ்நிலையில் நிறுவனத்தின் சிறந்த செயல்திறனைப் பாராட்டியது.

இந்திய அரசாங்கத்தின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின்  கீழ் உள்ள வங்கி சாரா நிதி நிறுவனமான  ஐஆர்இடிஏவின் கடன் புத்தக வளர்ச்சி மார்ச் 31, 2021 இல் ரூ. 27,854 கோடியில் இருந்து  31 மார்ச் 2022 நிலவரப்படி 33,931 கோடியாக அதிகரித்துள்ளது.  (21.82% வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளது). நிறுவனம் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ. 23,921 கோடி கடனை விடுவித்து சாதனை புரிந்துள்ளது.  ( இது முந்தைய ஆண்டு அனுமதியான  ரூ. 11,001 கோடியை விட 117.44% வளர்ச்சியாகும்)

மேலும் கூடுதல் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1821845

***************


(रिलीज़ आईडी: 1821867) आगंतुक पटल : 235
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी