தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

சர்வதேச உழைப்பாளர் தினத்தையொட்டி செங்கற்சூளை பெண் தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து பரிசோதனை முகாம்

Posted On: 01 MAY 2022 6:24PM by PIB Chennai

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை  அமைச்சர் திரு.பூபேந்தர் யாதவ், இன்று சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஃபரிதாபாத்தில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனைக்குச் சென்றார், அங்கு பெண் செங்கற்சூளைத் தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான  சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து பரிசோதனை முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.

சுகாதார பரிசோதனை முகாமில், மத்திய அமைச்சர் பெண் செங்கற் சூளை தொழிலாளர்கள் மற்றும் பிற தொழில்துறை பணியாளர்களை சந்தித்து, அவர்களுக்கு வழங்கப்படும் சுகாதார வசதிகள் குறித்து கேட்டறிந்தார். கூட்டத்தில், பெண் தொழிலாளர்களுக்கு ரத்தசோகை நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதுடன், முறையான சுகாதார பரிசோதனை மற்றும் சத்தான உணவின் அவசியம் குறித்தும் வலியுறுத்தினார். பெண் தொழிலாளர்களின் நல்ல ஆரோக்கியத்தை உறுதி செய்யாமல், “ஆரோக்கியமான இந்தியா வளமான இந்தியா என்ற கனவை நனவாக்க முடியாது என்று அவர் கூறினார்.

பிரதமரின்  ஷ்ரம் யோகி மான்தன் திட்டம், ஓய்வூதிய நன்கொடைத் திட்டம் மற்றும் இ-ஷ்ரம் திட்டம் போன்ற அமைச்சகத்தால் மேற்கொள்ளப்படும்  திட்டங்களைப் பற்றி தொழிலாளர்களிடம் விளக்கிய அவர்,  மருத்துவமனைக்கு வந்தவர்களையும்,  அனுமதிக்கப்பட்ட நோயாளிகளையும் சந்தித்து நலம் விசாரித்தார்.

மத்திய மின்துறை மற்றும் கனரக தொழில்துறை இணை அமைச்சர் திரு கிஷன் பால்,  மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு செயலாளர் திரு சுனில் பர்த்வால் உள்ளிட்டோர் அமைச்சருடன் சென்றிருந்தனர்.

மேலும் கூடுதல் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும்  https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1821841

***************



(Release ID: 1821865) Visitor Counter : 200