மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்

“மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்பில் புதிய நுட்பங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள்” குறித்த இணையவழி கருத்தரங்கை மீன்வளத்துறை நடத்தியது

Posted On: 30 APR 2022 4:37PM by PIB Chennai

சுதந்திரத்தின் 75-வது ஆண்டுப் பெருவிழா கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்பில் புதிய நுட்பங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்த இணையவழி கருத்தரங்கை மத்திய மீன்வளத்துறை இன்று  நடத்தியது. இந்த நிகழ்வுக்கு மீன்வளத்துறை செயலாளர் திரு ஜதீந்திர நாத் ஸ்வெயின் தலைமை தாங்கினார்.

 இதில் மீனவர்கள், விவசாயிகள், தொழில்துறையினர், மீன்வளத்துறை அலுவலர்கள், பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மீன்வளத்துறை அலுவலர்கள், மாநில வேளாண், கால்நடை பராமரிப்பு, மீன்வள பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள், விஞ்ஞானிகள், குஞ்சு பொறிப்பு நிறுவனங்களின் உரிமையாளர்கள், மாணவர்கள், மீன் வளர்ப்பு சம்பந்தப்பட்டவர்கள் உட்பட 350-க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

மீன்வகைகளின் உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனை அதிகரிக்கவும், இத்தகைய நுட்பங்களை வணிகமயமாக்கவும், பல்வேறு புதிய இனங்களை உருவாக்கவும், மீன் வளர்ப்பவர்களின்  லாபத்தை அதிகரித்து, இடுபொருள் செலவை குறைக்கவும் விஞ்ஞானிகள் புதிய வழிமுறைகளை கண்டறியுமாறு கருத்தரங்கில் தொடக்கவுரை நிகழ்த்திய துறையின் செயலாளர் திரு  ஸ்வெயின் கேட்டுக் கொண்டார்.

 இந்த கருத்தரங்கில் பேசிய இணைச் செயலாளர் (நிலப்பகுதி மீன்வளர்ப்பு பிரிவு) திரு சாகர் மெஹ்ரா, மீன் பிடிப்போர் மற்றும் விவசாயிகள் பயனடையும் வகையில் பல்வேறு திட்டங்களின் கீழ் அரசு நிதியுதவி வழங்குவதாக கூறினார்.  மேலும் அறிவியல் பூர்வமான வழிவகைகள், புதிய கண்டுபிடிப்புகள், நவீன தொழில்நுட்பங்களை புகுத்துதல் ஆகியவற்றை அரசு அதிகரிப்பதாகவும் அவர் தெரிவித்தார். நவீன நுட்பங்களை பயன்படுத்துவது, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டின் தேவை ஆகியவை பற்றியும் அவர் வலியுறுத்தினார்.

 மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1821599

***************

(Release ID: 1821599)



(Release ID: 1821615) Visitor Counter : 201


Read this release in: English , Urdu , Hindi