மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
இந்தியாவில் மின்னணு மற்றும் செமிகண்டக்டர் துறைகளுக்கான சாத்தியக்கூறுகள் குறித்து செமி மற்றும் ஐஈஎஸ்ஏ ஆலோசனை
Posted On:
30 APR 2022 3:36PM by PIB Chennai
செமிகண்டக்டர் மற்றும் மின்னணு துறையை மேம்படுத்துவதற்கான ஒத்துழைப்பு வாய்ப்புகளை ஆராயும் நோக்கில், இந்திய மின்னணு மற்றும் செமிகண்டக்டர் சங்க (ஐஈஎஸ்ஏ) தலைவர்கள் திரு விவேக் தியாகி மற்றும் திரு கே கிருஷ்ண மூர்த்தி ஆகியோரை செமி தலைமை செயல் அதிகாரி திரு அஜித் மனோச்சா சந்தித்தார்.
பெங்களூருவில் ஏப்ரல் 29 முதல் மே 1, 2022 வரை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நடத்தும் செமிகான் இந்தியா 2022 மற்றும் இந்தியாவில் செமிகண்டக்டர் சூழல் அமைப்பை மேம்படுத்துவதற்காக ரூ 76,000 கோடி செலவில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட திட்டத்தின் பின்னணியில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
இந்தியாவில் தொழில்துறையை ஊக்குவிப்பதும், செமிகண்டக்டர் மற்றும் பிற திட்டங்களின் பலன்கள் தொழில்துறையினரை சென்றடைவதையும் இலக்குகளை அடைவதையும் உறுதி செய்வதன் மூலம் முதலீட்டாளர்களுக்கு ஆதரவளிப்பதும் அரசின் தொலைநோக்கு பார்வையாகும்.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள மில்பிடாஸைத் தலைமையிடமாகக் கொண்ட செமி, செமிகண்டக்டர், மின்னணு வடிவமைப்பு மற்றும் உற்பத்தி விநியோகச் சங்கிலியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களை உள்ளடக்கிய முன்னணி உலகளாவிய தொழில் சங்கமாகும்.
துடிப்பான இந்திய செமிகண்டக்டர் மற்றும் மின்னணு வடிவமைப்பு மற்றும் உற்பத்தி சூழல் அமைப்பை உருவாக்குவதற்கும், மின்னணு தயாரிப்புகளுக்கான இலக்காக உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட “பிராண்ட் இந்தியா”-வை நிறுவுவதற்கான லட்சியத்தை அடைவதற்கும் உறுதியளிக்கும் முதன்மையான வர்த்தக அமைப்பாக ஐஈஎஸ்ஏ விளங்குகிறது. தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான திரு கே கிருஷ்ண மூர்த்தி தலைமையில் இது இயங்குகிறது.
ஒத்துழைப்பை வளர்ப்பதற்கும், நாட்டில் செமிகண்டக்டர் மற்றும் மைக்ரோ மின்னணு துறையில் சாத்தியமான வாய்ப்புகளை அடையாளம் காண்பதற்கும், திறனை உணர்ந்து செயல்படுவதற்கும் இரு சங்கங்களும் ஒப்புக்கொண்டன.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1821561
***************
(Release ID: 1821611)
Visitor Counter : 198