தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

கட்டாய சோதனையில் ஒழுங்குமுறை சிக்கல் அகற்றப்பட்டது - வணிகம் செய்வதை எளிதாக்குவதற்கான இன்னும் ஒரு நடவடிக்கை

Posted On: 30 APR 2022 1:22PM by PIB Chennai

குறிப்பிட்ட பொருட்களின் (மடிக்கணினிகள், வயர்லெஸ் விசைப்பலகைகள், விற்பனை முனைய இயந்திரங்கள் மற்றும் பிற மின்னணு உபகரணங்கள் போன்றவை) கட்டாயப் பதிவுசெய்தலை மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மேற்கொள்கிறது. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் (கட்டாயப் பதிவுக்கான தேவை) ஆணை, 2012,-ன் கீழ் இது செய்யப்படுகிறது.

தொலைத்தொடர்புக்கு பயன்படுத்தக்கூடிய சாதனங்களுக்கு இந்தியத் தந்தி (திருத்தம்) விதிகள், 2017-ன் கீழ் 2017-ம் ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி வெளியிடப்பட்ட ‘கட்டாய சோதனை மற்றும் தொலைத்தொடர்பு உபகரணங்களின் சான்றிதழ்’ தேவை என தொலைத்தொடர்புத் துறை குறிப்பிட்டுள்ளது.

தொழில்நுட்பம் அதிகரித்து வருவதால், ஸ்மார்ட் கடிகாரம், ஸ்மார்ட் புகைப்படக்கருவி போன்ற சில தயாரிப்புகள் தொடர்பான ஒழுங்குமுறைகள் ஒன்றுடன் ஒன்று கலந்துள்ளன. தொலைத்தொடர்புத் துறை மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் ஆகியவற்றின் அதிகார வரம்புகளை ஒன்று சேர்ப்பது தொடர்பாக தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் சங்கங்களிடமிருந்தும் பிரதிநிதித்துவம் பெறப்பட்டது.

தொலைத்தொடர்புத் துறை உடன் இதுதொடர்பாக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் கலந்தாலோசித்து, ‘கட்டாய சோதனை மற்றும் தொலைத்தொடர்பு உபகரணங்களின் சான்றிதழ்' வரம்பிலிருந்து பின்வரும் தயாரிப்புகளுக்கு விலக்கு அளிக்க முடிவு செய்துள்ளது: -

* கைபேசி பயனர் உபகரணங்கள் / கைபேசி

* சர்வர்

* ஸ்மார்ட் கடிகாரம்

* ஸ்மார்ட் புகைப்படக் கருவி

* விற்பனை மைய இயந்திரம்

பரவலாகப் பயன்படுத்தப்படும் இந்த தயாரிப்புகளின் மீதான விதிவிலக்குகள் இணக்கச் சுமையைக் குறைக்கவும் தொழில்துறையினர் தங்கள் தயாரிப்புகளை விரைவாக வெளிக்கொண்டு வருவதற்கும் இது உதவுவதோடு இறக்குமதி தாமதங்களையும் குறைக்கும்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தெளிவான மற்றும் எளிமைப்படுத்தப்பட்ட ஒழுங்குமுறை அமைப்புக்கான லட்சியத்தின் ஒரு பகுதியாக இந்த முயற்சி அமைந்துள்ளது.  இந்த ஒழுங்குமுறை சீர்திருத்தம்  மின்னணுவியல் உற்பத்தி நிறுவனங்களுக்கு வணிகம் செய்வதை எளிதாக்குவதோடு  1 டிரில்லியன் டாலர் டிஜிட்டல் பொருளாதாரமாக இந்தியாவை மாற்றுவதற்கு பங்களிக்கும்.

இது தொடர்பான அரசிதழ் அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1821530

***************

(Release ID: 1821530)(Release ID: 1821600) Visitor Counter : 150


Read this release in: English , Urdu , Hindi , Bengali