பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2022 மே 1-ந்தேதி உஜ்வாலா தினத்தையொட்டி 5000 எல்பிஜி பஞ்சாயத்துகள்

Posted On: 30 APR 2022 10:46AM by PIB Chennai

பிரதமரின் உஜ்வாலா திட்டம், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் இலவச எரிவாயு இணைப்பு வழங்கி சமூக ரீதியில் அனைவரையும் உள்ளடக்கும் மிகப்பெரிய நடவடிக்கையாகும். இத்திட்டத்தை பிரதமர் உத்தரப்பிரதேசத்தின் பல்லியாவில் 2016-ம் ஆண்டு மே 1-ந்தேதி துவக்கிவைத்தார். இத்திட்டத்தின் சாதனையைக் குறிக்கும்  வகையில், மத்திய பெட்ரோலிய அமைச்சகம், மே 1-ந்தேதியை உஜ்வாலா தினமாக கொண்டாட முடிவு செய்துள்ளது. இதனையொட்டி, 5000-க்கும் மேற்பட்ட எல்பிஜி பஞ்சாயத்துக்களை நடத்த எண்ணெய் நிறுவனங்கள் ஏற்பாடு செய்துள்ளன. அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதுடன், எல்பிஜி-யை பாதுகாப்பாக பயன்படுத்துவது, முறையாகப் பயன்படுத்துவதன் மூலம் எரிவாயுவை சேமிப்பது, மேலும் அதிக இணைப்புகளை சேர்ப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இதற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.

ஏழை பயனாளிகளுக்கு இத்திட்டம் சரியான நேரத்தில் சென்றடையும் வகையில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மேற்கொண்டு வரும் முயற்சிகளை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி பாராட்டியுள்ளார். அத்துடன் உஜ்வாலா பயனாளிகளுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். உஜ்வாலா தினத்தையொட்டி அசாம் மாநிலம் திப்ருகரில் உஜ்வாலா தினக் கொண்டாட்டங்களுக்கு மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு துறை இணையமைச்சர் திரு ராமேஸ்வர் தெலி தலைமையேற்று, புதிய பயனாளிகளுக்கு இலவச எரிவாயு இணைப்புகளை வழங்குவார்.

***************

(Release ID: 1821485)


(Release ID: 1821520) Visitor Counter : 291