மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
இந்திய செமிகண்டக்டர் ஸ்டார்ட்அப்களுக்கு ஆதரவளிக்க குவால்காம் மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் சி-டாக் இடையே கூட்டு
Posted On:
29 APR 2022 4:02PM by PIB Chennai
குவால்காம் குழுமத்தின் அங்கமான குவால்காம் இந்தியா பிரைவேட் லிமிடெட், இந்தியாவின் செமிகண்டக்டர் துறையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்காக குவால்காம் செமிகண்டக்டர் வழிகாட்டுதல் திட்டம் 2022-ஐ தொடங்கி நடத்தத் திட்டமிட்டுள்ளது.
வழிகாட்டுதல், தொழில்நுட்பப் பயிற்சி மற்றும் தொழில்துறையை மேம்படுத்துவதற்கான நோக்கத்துடன் இதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய அரசின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் தன்னாட்சி பெற்ற அறிவியல் அமைப்பான சி-டாக் உடன் குவால்காம் இந்தியா ஒத்துழைப்பை ஒன்றை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஒத்துழைப்பின் கீழ், சி-டாக் மற்றும் குவால்காம் இந்தியா ஆகியவை பின்வரும் பரந்த நோக்கங்களை நோக்கிச் செயல்பட விரும்புகின்றன:
* இந்திய சூழலியலில் செமிகண்டக்டர் வடிவமைப்பிற்குத் தேவையான தொழில்நுட்ப முன்னேற்றங்கள், அறிவுசார் சொத்து சார்ந்த கண்டுபிடிப்பு மற்றும் தயாரிப்பு மேம்பாடு.
* கண்டுபிடிப்புகளில் அபாயங்களைக் குறைக்க உதவிகள்; வணிக வளர்ச்சியின் வேகத்தை விரைவுபடுத்துதல்; மற்றும் செமிகண்டக்டர் வடிவமைப்பில் ஈடுபட்டுள்ள இந்திய ஸ்டார்ட்அப்-களின் திறன்களை மேம்படுத்துதல்.
* துறை வல்லுநர்கள், முதலீட்டாளர்கள், வழிகாட்டு அமைப்புகள், தொழில்துறை சங்கங்கள் மற்றும் பெரிய நிறுவனங்களுடனான ஸ்டார்ட் அப்களுக்கான அணுகலை எளிதாக்குதல்.
* எதிர்காலத்தில் செமிகண்டக்டர் விநியோகச் சங்கிலிகளை உருவாக்க அல்லது பெரும் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய தொழில்நுட்பங்களைக் கொண்ட உயர்-வளர்ச்சிக்கான வாய்ப்புகளை வழங்கும் தளங்கள் மற்றும் மன்றங்களை உருவாக்குதல்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1821268
***************
(Release ID: 1821328)
Visitor Counter : 250