அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
பழ ஈக்களில் காணப்படும் நாள்பட்ட லார்வா கூட்டம், அதிகளவிலான மற்றும் விரைவாக குஞ்சு பொறிக்கும் முட்டைகளை நோக்கிய பரிணாம வளர்ச்சி
Posted On:
29 APR 2022 1:38PM by PIB Chennai
நாள்பட்ட லார்வா கூட்டம் சேர்வதன் மூலம், அதிகளவிலான மற்றும் விரைவாக குஞ்சு பொறிக்கும் முட்டைகளை அதிகரிக்க செய்யும் பூச்சி இனங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
2003 வரை லார்வா கூட்டத்தை பின்பற்றக் கூடிய பல ஈக்கள், மிகுந்த போட்டித்தன்மை கொண்டவையாக இருக்கும் என கருதப்பட்டது. அமோனியா மற்றும் யூரியா போன்ற வளர்சிதை கழிவுகளின் நச்சுத்தன்மையை சகித்துக்கொள்ளக் கூடியவையாக இவை இருக்கும் என்றும் கருதப்பட்டது.
ஆனால் இந்த புரிதலில் இருந்து தலைகீழ் மாற்றமாக, மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறைக்கு உட்பட்ட தன்னாட்சி பெற்ற நிறுவனமான ஜவஹர்லால் நேரு அதிநவீன ஆராய்ச்சி மைய ஆராய்ச்சியாளர்கள் கடந்த 15 ஆண்டுகளாக மேற்கொண்ட ஆய்வில் இருந்து, குறிப்பிட்ட அளவிலான உணவு சேர்க்கை மற்றும் முட்டைகளின் எண்ணிக்கை அடிப்படையில் நாள்பட்ட லார்வா கூட்டம் சேர்வது தெரிய வந்துள்ளது.
ஜர்னல் ஆப் ஜெனிடிக்ஸ் என்ற இதழில் அண்மையில் வெளியான ஒரு ஆய்வு முடிவில், அதிகளவிலான மற்றும் விரைவாக குஞ்சு பொறிக்கும் முட்டைகள் அனைத்து பழ ஈ வகைகளிலும், பொதுவாக கூட்டமாக காணப்படுவதை இந்த ஆராய்ச்சியாளர் குழு கண்டறிந்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1821225
***************
(Release ID: 1821309)
Visitor Counter : 193