அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

வெல்டிங் செயல்பாடுகளை வேகமாகவும், ஆற்றல் திறன் கொண்டதாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் மாற்றும் புதிய ஸ்மார்ட் இயந்திரம்

Posted On: 29 APR 2022 1:40PM by PIB Chennai

தற்போது பயன்பாட்டில் உள்ள வழக்கமான வெல்டிங் செயல்முறைகளை விட, வேகமாகவும் குறைந்த மின்சார நுகர்வுடனும் இரும்பு குழாய்களை வெல்டிங் செய்வதற்கான ஸ்மார்ட் ஐஓடி அடிப்படையிலான இயந்திரத்தை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

உற்பத்தித் தொழில்கள் மேம்பட்ட தொழில்நுட்பங்களை நோக்கி நகரும் வேளையில், மின்சார நுகர்வைக் குறைக்கவும், மனிதப் பிழைகளைத் தவிர்க்கவும், வெல்டிங் பணிகளை தானியங்கி முறையில் மேற்கொள்ளவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் தயாரிப்புகளை விரைவாக உற்பத்தி செய்யவும் தேவை ஏற்பட்டுள்ளது.

ஒலி மற்றும் அதிர்வுக்கான சென்சார்கள் பதிக்கப்பட்ட “காந்தத்தால் உந்தப்பட்ட ஆர்க் பட் வெல்டிங் கருவி” என்ற இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (ஐஓடி) ஒருங்கிணைந்த இயந்திரத்தை பெங்களூரு தயானந்த சாகர் பல்கலைக்கழக பொறியியல் பள்ளியின் மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பேராசிரியர் டாக்டர் எஸ் அருங்கலை வேந்தன் உருவாக்கியுள்ளார். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் ஆதரவை இது பெற்றுள்ளது,

திருச்சிராப்பள்ளி பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் லிமிடெட்டில் உள்ள வெல்டிங் ஆராய்ச்சி நிறுவனத்தின் செயல்பாட்டு முறையை ஆராய்ந்த முனைவர் வேந்தன், குறைந்த விலையில் ஒருங்கிணைந்த இயந்திரத்தை உருவாக்கும் திட்டத்தை செயல்படுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1821227

***************


(Release ID: 1821266) Visitor Counter : 209


Read this release in: English , Urdu , Hindi