நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

நாட்டின் உணவுப் பாதுகாப்பு அணுகுமுறை மற்றும் கண்டுபிடிப்புகள் உலக வர்த்தக அமைப்பின் உணவு பாதுகாப்பு கருத்தரங்கில் பாராட்டைப் பெற்றன.

Posted On: 28 APR 2022 5:13PM by PIB Chennai

நாட்டின் உணவுப் பாதுகாப்பு அணுகுமுறை மற்றும் புதுமைக் கண்டுபிடிப்புகள், சமூகத்தின் ஏழை மற்றும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினர் மீதான மத்திய  அரசின் அக்கறை மற்றும் உணர்திறனைப் பிரதிபலிக்கும் வகையில் இருப்பதாக உலக வர்த்தக அமைப்பின் கருத்தரங்கில் பாராட்டைப் பெற்றன.

உணவுப் பாதுகாப்பு குறித்த உலக வர்த்தக அமைப்பின் உயர்நிலை கருத்தரங்கு 26 ஏப்ரல் 2022 அன்று ஜெனீவாவில் நடைபெற்றது.

இதில் ஜெனீவாவை தளமாகக் கொண்ட வர்த்தக அதிகாரிகள், கொள்கை வகுப்போர், சர்வதேச நிறுவனங்கள் மற்றும் சிந்தனைக் குழுக்கள் ஆகியவற்றின் நிபுணர்களிடையே வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது

உலக வர்த்தக அமைப்பின் கருத்தரங்கில் இந்தியாவின் பிரதிநிதியாக உணவு மற்றும் பொது விநியோகத் துறையின் இணைச் செயலாளர் எஸ். ஜெகநாதன் கலந்து கொண்டார். இந்த கருத்தரங்கில் உரையாற்றிய அவர்,நாட்டில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு, குறிப்பாக கொவிட் சமயத்தில், கவனமாகவும், கண்ணியமான முறையிலும் உணவு தானியங்களை போதுமான அளவில் சேகரித்து, பொது விநியோக அமைப்பில்  மேற்கொள்ளப்பட்ட துணிச்சல் மிக்க தொழில்நுட்ப அடிப்படையிலான சீர்திருத்தங்கள் மூலம் வழங்கிய சிறந்த அனுபவத்தை எடுத்துரைத்தார்.

உலக வர்த்தக அமைப்பின் உயர்மட்டக் கருத்தரங்கில் 'தேசிய மற்றும் பிராந்திய அனுபவங்கள்' என்ற குழுவில் இந்தியக் கண்ணோட்டம் பற்றிய விரிவான விளக்கத்தை அவர் வழங்கினார்.

நாடு முழுவதும் மக்களை மையமாகக் கொண்ட  திட்டங்களை மேலும் விரிவடையச் செய்வதற்கு  துறைகளுக்கிடையேயான தரவுப் பகிர்வை உருவாக்குவதற்கான அரசின்  முயற்சிகளையும் அவர் எடுத்துரைத்தார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1820972

***************



(Release ID: 1821051) Visitor Counter : 138


Read this release in: English , Urdu , Hindi