மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

பாதுகாப்பான மற்றும் நம்பகமான இணையத்திற்கான நடைமுறைகள் மற்றும் சைபர் சம்பவங்களைப் புகாரளித்தல் தொடர்பான வழிகாட்டுதல்களை செர்ட்-இன் வெளியிட்டுள்ளது

Posted On: 28 APR 2022 2:14PM by PIB Chennai

தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000-ன் 70பி பிரிவின் விதிகளின்படிநாட்டில் இணையப் பாதுகாப்புத் துறையில் பல்வேறு செயல்பாடுகளுக்கான தேசிய நிறுவனமாக இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (செர்ட்-இன்செயல்படுகிறதுஇணைய அச்சுறுத்தல்களை செர்ட்-இன் தொடர்ந்து ஆய்வு செய்வதோடுபுகாரளிக்கப்படும் சைபர் சம்பவங்களைக் கண்காணிக்கிறது.

நிறுவனங்கள் மற்றும் பயனர்களுக்கு அவர்களின் தரவு/தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப உள்கட்டமைப்பைப் பாதுகாக்க உதவும் ஆலோசனைகளை செர்ட்-இன் தொடர்ந்து வழங்குகிறதுஇணையம் தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் சம்பவங்கள் தொடர்பான அவசர நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காகசேவை வழங்குநர்கள்இடைத்தரகர்கள்தரவு மையங்கள் மற்றும் பெருநிறுவனங்கள் ஆகியவற்றிலிருந்து தகவல்களை செர்ட்-இன் பெறுகிறது.

சைபர் சம்பவங்கள் மற்றும் தொடர்புடைய நிகழ்வுகளை கையாளும் போதுஇடையூறு விளைவிக்கும் சில இடைவெளிகளை செர்ட்-இன் கண்டறிந்துள்ளதுஅடையாளம் காணப்பட்ட இடைவெளிகள் மற்றும் சிக்கல்களை நிவர்த்தி செய்யதகவல் பாதுகாப்பு நடைமுறைகள்செயல்முறைதடுப்புபதில் நடவடிக்கை மற்றும் சைபர் சம்பவங்களைப் புகாரளித்தல் தொடர்பான வழிகாட்டுதல்களை தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000-ன் 70பி பிரிவின் துணைப்பிரிவு (6)-ன் விதிகளின் கீழ் செர்ட்-இன் வெளியிட்டுள்ளதுஇந்த வழிகாட்டுதல்கள் 60 நாட்களுக்குப் பிறகு நடைமுறைக்கு வரும்.

சைபர் சம்பவங்களை செர்ட்-இன்-க்கு கட்டாயமாகப் புகாரளிக்க வேண்டும்தகவல் தொடர்பு தொழில்நுட்ப அமைப்புகளின் பதிவுகளை பராமரித்தல்தரவு மையங்கள்விர்ச்சுவல் பிரைவேட் சர்வர் (விபிஎஸ்வழங்குநர்கள்விபிஎன் சேவை வழங்குநர்கள்கிளவுட் சேவை வழங்குநர்கள் மூலம் சந்தாதாரர்/வாடிக்கையாளர் பதிவு விவரங்கள்மெய்நிகர் சொத்து சேவை வழங்குநர்கள்மெய்நிகர் சொத்து பரிமாற்ற வழங்குநர்கள் மற்றும் பாதுகாவலர் கோப்பு வழங்குநர்களின் கேஒய்சி விதிமுறைகள் மற்றும் நடைமுறைகள் இவற்றில் அடங்கும்.

ஒட்டுமொத்த இணையப் பாதுகாப்பு நிலையை இந்த வழிகாட்டுதல்கள் மேம்படுத்துவதோடுநாட்டில் பாதுகாப்பான மற்றும் நம்பகமான இணையத்தை உறுதி செய்யும்.

செர்ட்-இன் வெளியிட்டுள்ள வழிமுறைகளை https://www.cert-in.org.in/Directions70B.jsp எனும் முகவரியில் காணலாம்.

மேலும் விவரங்களுக்குஇந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1820904

****

 (Release ID: 1820964) Visitor Counter : 386