நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
இந்திய உணவுக் கழகம், அதன் தலைமையகம் மற்றும் நாடு முழுவதும் உள்ள அனைத்து அலுவலகங்களிலும் தூய்மை இயக்கத்தை மேற்கொள்கிறது
Posted On:
27 APR 2022 6:18PM by PIB Chennai
இந்திய உணவுக் கழகம் (FCI) ஏப்ரல் 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அமைந்துள்ள பல்வேறு அலுவலகங்களுடன் புது டெல்லியில் உள்ள அதன் தலைமையகத்தில் தூய்மை இயக்கப் பணிகளை மேற்கொண்டது. இந்த இயக்கத்தின் போது இந்திய உணவுக் கழகத்தின் அனைத்து அலுவலகங்களிலும் 6000-க்கும் மேற்பட்ட கோப்புகள் களையெடுக்கப்பட்டன.
இந்த இரண்டு நாள் தூய்மை இயக்கப் பணிகளின் போது, நூலகம், அடித்தளம், பூங்கா உள்ளிட்ட வளாக சுற்றுப்புறங்கள் மற்றும் பிரதான வாயிலுக்கு வெளியேயுள்ள போகுதிகளிலும் சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். தலைமையகத்தில் உள்ள நிகழ்ச்சி அரங்கம், தரப்பு பரிசோதனை ஆய்வகம் மற்றும் உடற்பயிற்சிக்கு கூடம் போன்ற இடங்களிலும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இது போன்ற தூய்மைப் பணிகளை நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள அதன் கள அலுவலகங்களிலும் மேற்கொண்டன.
காகிதப் பயன்பாடு இல்லாத அலுவலக கலாச்சாரம், இந்திய உணவுக்கு கழகத்தின் தலைமை அலுவலகத்தில் உள்ள அனைத்து கோப்புகளையும் ஸ்கேன் செய்து டிஜிட்டல் மயமாக்கும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை 09 (ஒன்பது) பிரிவுகளின் கீழ் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்கங்களை உள்ளடக்கிய கோப்புகள் அனைத்தும் டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்டுள்ளன. மின்னணு-அலுவலக நடைமுறைகள் மூலம் அலுவலக வளாகத்தில் தூய்மையைப் பராமரிப்பத்துடன், காகிதப் பயன்பாட்டைக் குறைப்பதையும் உறுதி செய்யும்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1820630
*********
(Release ID: 1820681)
Visitor Counter : 485