ஆயுஷ்

நீடித்த வளர்ச்சி மற்றும் ஆரோக்கியமான கிரகத்திற்கு ஆயுஷ் அமைச்சகத்தின் இரட்டை குஜராத் நிகழ்வுகளின் சூழலியல் பாதை ஊக்கமளிக்கிறது

Posted On: 27 APR 2022 1:59PM by PIB Chennai

உலகெங்கிலும் உள்ள நிறுவனங்கள் மற்றும் தலைவர்களிடையே அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் தொடர்பான கவலைகள் மற்றும் உணர்வுகள் மூலம் தற்போது நிறுவனங்களின் நடவடிக்கைகளில் பிரதிபலிக்கின்றன. அண்மையில் குஜராத்தில் நடைபெற்ற ஆயுஷ் அமைச்சகத்தின் இரண்டு நிகழ்வுகளின் போது சுற்றுச்சூழலுக்கு உகந்த நடவடிக்கைகள் மற்றும் ஏற்பாடுகள் இதையே நிரூபித்துள்ளன. இந்த நிகழ்வின் போது 1 லட்சத்திற்கும் அதிகமான பிளாஸ்டிக் பாட்டில்கள், 15000 பிளாஸ்டிக் டேக்குகள் மற்றும் 50 ஆயிரம் பிளாஸ்டிக் கட்லரிகளின் பயன்பாடு தவிர்க்கப்பட்டது. இதனால், 119437.5 கிலோ கார்பன் டை ஆக்சைடு குறைக்கப்பட்டது.

மேலும், உலகெங்கிலும் உள்ள நாடுகள், அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் போன்ற தீமை விளைவிக்கக்கூடிய பொருட்களின் பயன்பாடுகளைக் கட்டுப்படுத்த ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றன. பாலைவனமாதலை எதிர்த்துப் போரிடுவதற்கான ஐ.நா சபை (UNCCD) மாநாட்டின் 14-வது அமர்வில் (CoP-14) பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், "ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் மக்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதுடன்  நிலத்தின் ஆரோக்கியமும்  சீர்குலைவதற்கு முக்கிய காரணமாக இருப்பதாக தெரிவித்தார்."

குஜராத்தில் ஆயுஷ் அமைச்சகத்தின் அண்மையில் முடிவடைந்த நிகழ்வுகள், அரசின் நோக்கத்திற்கு உதாரணமாகவும்   முன்மாதிரியாகவும் இருந்தது. உலக சுகாதார அமைப்பின்  பாரம்பரிய மருத்துவத்திற்கான முதல் சர்வதேச மையத்திற்கு (GCTM) பிரதமர் அடிக்கல் நாட்டினார். ஏப்ரல் 19 ஆம் தேதி ஜாம்நகரில் நடைபெற்ற விழா மற்றும் 3 நாள் உலகளாவிய ஆயுஷ் முதலீடு மற்றும் புதுமைக் கண்டுபிடிப்பு உச்சி மாநாட்டை (GAIIS) ஏப்ரல் 20 ஆம் தேதி மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத் மற்றும் உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர்  டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் முன்னிலையில் தொடங்கி வைத்தார். இந்த மிகப்பெரிய நிகழ்வுகள், கார்பன் தடங்களைக் குறைப்பதற்கான அர்ப்பணிப்பு முயற்சிகளுடன், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கைக் கட்டுப்படுத்துவதற்கான நாட்டின் உறுதியையும் வெளிப்படுத்துவதாக அமைந்தது. இந்த இரண்டு நிகழ்வுகளும் உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்தவை. இது கொள்கை வகுப்பாளர்கள், சுகாதார வல்லுநர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் பங்குதாரர்களின் கவனத்தை ஈர்த்ததுடன்,  ஆயிரக்கணக்கானோரின் கவனத்தையும் ஈர்த்தது.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1820456

***************



(Release ID: 1820505) Visitor Counter : 126


Read this release in: English , Urdu , Hindi , Gujarati