நிதி அமைச்சகம்

சஜல் திட்டத்தின் கீழ் 20 அரசு பள்ளிகளுக்கு பாதுகாப்பான குடிதண்ணீர் வசதி

Posted On: 26 APR 2022 4:42PM by PIB Chennai

கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்கும் வகையில், பட்பர்கஞ்ச் சுங்கத்துறை மற்றும் பிற சுங்க ஆணையரகங்கள் இணைந்து, ஸ்வச்தா திட்டத்தின் சஜல் முன்முயற்சியின் கீழ், பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வசதியை வழங்குவதற்கான முயற்சியை மேற்கொண்டன.

இதன் மூலம் மாணவர்கள் தங்கள் படிப்பு மற்றும் செயல்பாடுகளை சிறப்பாக மேம்படுத்துவதற்கு ஏற்ற சூழலை பள்ளிகளில் ஏற்படுத்த முடியும். சோனேபட், பானிபட், ஃபரிதாபாத், பல்வால் மற்றும் குருகிராம் ஆகிய மாவட்டங்களில் 20 அரசுப் பள்ளிகள் இதற்காக கண்டறியப்பட்டுள்ளன.

மத்திய நிலத்தடி நீர் வாரியம் பரிந்துரைத்தபடி, தொழிற்சாலை வெளியேற்றம் காரணமாக நிலத்தடி நீர் மாசுபடும் தொழில்துறை மண்டலங்களைக் கொண்ட கிராமப்புறங்களில் இந்தப் பள்ளிகள் அமைந்துள்ளன.

இந்திய அரசின் ஜல் சக்தி அமைச்சகத்தின் நீர்வளத் துறை, 2021 அக்டோபரில் ஹரியானாவில் நிலத்தடி நீர் நிலை குறித்த தனது அறிக்கையில், ஹரியானாவின் பல்வேறு மாவட்டங்களில் நிலத்தடி நீர் பெரும்பாலும் உப்புத்தன்மை கொண்டதாகவும், குடிப்பதற்கு ஏற்றதாக இல்லை என்றும் எடுத்துரைத்துள்ளது. 

ரசாயன அளவுருக்கள் அனுமதிக்கப்பட்ட வரம்புகளை விட அதிகமாக இருந்ததால், குறைவான மதிப்பீட்டை தண்ணீர் கொண்டுள்ளது என்பதையும் அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1820170

***************



(Release ID: 1820269) Visitor Counter : 134


Read this release in: English , Urdu , Hindi