இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

மல்லகம்புடனான மும்பையின் வலுவான தொடர்பை உலக சாம்பியன் தீபக் ஷிண்டே விளக்குகிறார்

Posted On: 26 APR 2022 4:49PM by PIB Chennai

பாலிவுட் மற்றும் அதன் கவர்ச்சியின் காரணமாக கனவுகளின் நகரம் என்று மும்பை வர்ணிக்கப்படுகிறது. விளையாட்டைப் பொறுத்தவரை, சுனில் கவாஸ்கர் மற்றும் சச்சின் டெண்டுல்கர் போன்ற ஜாம்பவான்களால் இந்நகரத்துடன் கிரிக்கெட் இணைக்கப்பட்டுள்ளது.

ஆனால், கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ள ஜெயின் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுகள் 2021-ல், மும்பை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் தங்கள் செயல்பாடுகளால் அனைவரையும் திகைக்க வைத்த காரணத்தால், மல்லகம்ப் அரங்கிலும் மும்பை பேசு பொருளானாது.

ஆண்கள் ஆல்-ரவுண்ட் தனிநபர் மல்லகம்ப் நிகழ்வில் உலக சாம்பியனான தீபக் ஷிண்டே திங்களன்று பங்கேற்றார், மும்பை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அவரது அணியினர் அவரை உற்சாகப்படுத்தினர். மொத்தம் 27.30 மதிப்பெண்களைப் பெற்று அன்றைய சிறந்த வீரராக தீபக் உருவெடுத்தார்.

 

என் பெற்றோர் இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். சவால்களுக்கிடையிலும் விளையாட்டைத் தொடர்வதில் அவர்கள் எப்போதும் எனக்கு ஆதரவாக இருக்கிறார்கள்,” என்று அவர் கூறினார்.

மும்பை நகரத்துடன் உள்ளார்ந்த தொடர்பை மல்லகம்ப் கொண்டுள்ளது. வரலாற்று நூல்கள் மற்றும் பண்டைய கலைப்பொருட்களின் சான்றுகள் படி, மராட்டிய மன்னர் இரண்டாம் பேஷ்வா பாஜிராவின் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு பயிற்றுவிப்பாளரான பாலம்பட்ட தாதா தியோதர் 1800-களில் பேஷ்வா ராணுவத்திற்கான பயிற்சி முறையாக இக்கலை வடிவத்தை மீட்டெடுத்தார். லக்ஷ்மிபாய், நானா சாஹேப், தாந்தியா தோப்பே போன்ற மராட்டியப் பேரரசர்களும் மல்லகம்ப் பயிற்சி செய்ததாக வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.

"பேரரசர்களின் பாரம்பரியத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க, மல்லகம்பை ஒரு விளையாட்டாக மகாராஷ்டிரா ஏற்றுக்கொண்டது. மும்பையின் அனைத்து பகுதிகளிலும் மல்லகம்ப் பரவியுள்ளது,” என்று கண்டிவலியைச் சேர்ந்த தீபக் விளக்கினார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1820166

 

*******



(Release ID: 1820258) Visitor Counter : 108


Read this release in: Urdu , Punjabi , English , Hindi