ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

'இந்திய ஃபார்மா விஷன் 2047' என்ற கருப்பொருளில் மருந்து மற்றும் மருத்துவ சாதனத் துறை தொடர்பான 7-வது சர்வதேச மாநாட்டின் குழு விவாதத்திற்கு மருந்துத் துறையின் செயலாளர் மற்றும் மத்திய சுகாதாரச் செயலாளர் தலைமை தாங்கினார்.

Posted On: 26 APR 2022 4:29PM by PIB Chennai

மருந்து மற்றும் மருத்துவ சாதனத் துறை தொடர்பான 7-வது சர்வதேச மாநாட்டின் இரண்டாம் நாளில், மருந்துத் துறை செயலாளர் திருமதி எஸ் அபர்ணா மற்றும் மத்திய சுகாதார செயலாளர் திரு ராஜேஷ் பூஷன் ஆகியோர் தலைமையில் மருந்துத் துறையின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் 'இந்திய ஃபார்மா விஷன் 2047' என்ற கருப்பொருளில் குழு விவாதம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேசிய மருந்துத் துறை செயலாளர், மருந்துத் துறையில் விலை, தரம் மற்றும் அளவு ஆகிய மூன்று முக்கிய நன்மைகளை இந்தியா கொண்டுள்ளது, இது மேலும் அதிகரிக்கப்பட வேண்டும் என்றார். உயர் உற்பத்தி அளவிலும், மலிவு விலையிலும் நல்ல தரமான பொது மருந்துகளை வழங்குவதில் இந்தியா நற்பெயரைக் கட்டியெழுப்பியுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

 

குறைந்த வருமானம் கொண்ட பொருளாதாரங்கள் மற்றும் மேம்பட்ட சந்தைகளில் பலவற்றின் தேவைகளில் 50 சதவீதத்தை நல்ல தரமான பொது மருந்துகளை வழங்குவதன் மூலம் எங்களால் தொடர்ந்து பூர்த்தி செய்ய முடிகிறது என்பது மிகவும் பெருமைக்குரிய விஷயம் என்ற அவர் 2047-ம் ஆண்டிற்குள் நாம் முன்னேறி, உலகளாவிய மருந்தகத் தலைவராக இருக்க விரும்புகிறோம் என்றார்.

பங்குதாரர்களின் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த அவர், “பொது ஆராய்ச்சியை அணுகக்கூடியதாக மாற்றுவதன் மூலம் பெரியநிறுவனங்கள், ஸ்டார்ட் அப்கள், தொழில் மற்றும் கல்வித்துறை ஆகியவற்றுக்கு இடையேயான ஒத்துழைப்பு மேம்படும்,” என்றார்.

சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் செயலாளர் திரு ராஜேஷ் பூஷன் பேசுகையில், “கடந்த எட்டு ஆண்டுகளில் நல்வாழ்வுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. 2047-ம் ஆண்டிற்குள் நமது நாடு மக்கள்தொகை அடிப்படையில் எப்படி இருக்கும் என்பதை உணர வேண்டியது அவசியம். நமது இளைஞர்கள் சிறந்து விளங்குவதும் வயதானவர்கள் நல்ல வாழ்க்கைத் தரத்தை அனுபவிப்பதும் அவசியம். எனவே, வரவிருக்கும் ஆண்டுகளில் மருந்துகள் மற்றும் நோயறிதல்களுக்கான அணுகல் மீது கவனம் செலுத்தும் ஆராய்ச்சியை வரும் ஆண்டுகளில் நாம் உறுதி செய்ய வேண்டும்”, என்றார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1820148

 

******



(Release ID: 1820255) Visitor Counter : 128


Read this release in: English , Urdu , Hindi , Telugu