அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
காட்டுத் தீ போன்றவற்றால் இந்தியாவில் சூரிய மின் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்படுகிறது: ஆய்வில் தகவல்
Posted On:
26 APR 2022 2:52PM by PIB Chennai
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக கோடை காலத்தில் ஏற்படும் காட்டுத் தீ போன்றவற்றால் நாட்டின் சூரிய மின் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்படுகிறது என புதிய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
சூரிய மின்சக்தி ஆலைகளின் உற்பத்தியில் காட்டுத் தீயின் நேரடி மற்றும் மறைமுக விளைவுகளால் ஏற்படும் ஆற்றல் மற்றும் நிதி இழப்புகளைப் பற்றிய இந்த ஆய்வு, மின் உற்பத்தியைத் திட்டமிட உதவும் .
சமீபகாலமாக, போதுமான சூரிய வளங்களைக் கொண்ட இந்தியா போன்ற வளரும் நாடுகளில் சூரிய சக்தி உற்பத்தி பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், மேகங்கள், ஏரோசல்கள் மற்றும் மாசு போன்ற பல காரணிகள் சூரிய ஒளி மின்னழுத்தம் மற்றும் செறிவூட்டப்பட்ட சூரிய மின் நிலையங்களில் செயல்திறன் சிக்கல்களை ஏற்படுத்தும். சூரிய சக்தி அமைப்பின் பெரிய அளவிலான வளர்ச்சிக்கு சரியான திட்டமிடல் தேவைப்படுகிறது, மேலும் சூரிய ஆற்றலை மதிப்பிட வேண்டிய அவசியமும் உள்ளது.
இதை மனதில் வைத்து, இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி அமைப்பான ஆர்யபட்டா ஆய்வு அறிவியல் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் குழு மற்றும் ஏதென்ஸின் தேசிய கண்காணிப்பகம் இணைந்து சூரிய ஆற்றல் உற்பத்தியைக் குறைக்கும் காரணிகளைக் கண்டறிய முயன்றன. மேகங்கள் மற்றும் ஏரோசோல்களைத் தவிர, சூரிய ஆற்றல் உற்பத்தியைக் குறைப்பதில் காட்டுத் தீ மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை அவர்கள் கண்டறிந்தனர்.
தற்போதைய ஆய்வின் கண்டுபிடிப்புகள், எரிசக்தி மேலாண்மை மற்றும் திட்டமிடல் ஆகியவற்றில் காட்டுத் தீயின் தாக்கம் குறித்து முடிவெடுப்பவர்களிடையே விழிப்புணர்வை பெரியளவில் அதிகரிக்கும்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1820123
***************
(Release ID: 1820188)
Visitor Counter : 165