சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஜி-20-ன் இந்தியாவின் தலைமைப் பதவி, இந்தியா மற்றும் ஐரெனா ஆகிய இரு தரப்புகளுக்கும் ஒரு பொன்னான வாய்ப்பாகும்: திரு பூபேந்தர் யாதவ்

Posted On: 26 APR 2022 1:15PM by PIB Chennai

மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் மற்றும் சர்வதேச புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முகமை (ஐரெனா) தலைமை இயக்குநர் திரு ஃபிரான்செஸ்கோ லா ஆகியோர் இன்று சந்தித்தனர்.

ஐரெனா மற்றும் இந்தியாவிற்கு இடையேயான ஈடுபாட்டை வலுப்படுத்துவது உட்பட பரஸ்பர நலன் சார்ந்த பிற விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. ஜி-20-ன் இந்தியாவின் தலைமைப் பதவி, இந்தியா மற்றும் ஐரெனா ஆகிய இரு தரப்புகளுக்கும் ஒரு பொன்னான வாய்ப்பாகும் என்று திரு பூபேந்தர் யாதவ் கூறினார்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, குறிப்பாக சூரிய சக்தி துறையில் ஐரெனாவின் உலகளாவிய அனுபவங்களைக் கருத்தில் கொண்டு,  காப் 26 பருவநிலை மாநாட்டில் நமது மாண்புமிகு பிரதமரால் அறிவிக்கப்பட்ட மேம்பட்ட இலக்குகளை அடைவதற்கான இந்தியாவின் முயற்சிகளில் ஐரெனா மிக முக்கிய பங்கு வகிக்க முடியும் என்று அமைச்சர் கூறினார்.

வளரும் நாடுகளின் வளர்ச்சி லட்சியங்களில் சமரசம் செய்யாமல் மற்றும் யாரையும் விட்டுவிடாமல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறைகளின் தொழில் மாற்றத்தை எவ்வாறு துரிதப்படுத்த முடியும் என்பது குறித்து சிந்திக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

ஐரெனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான ஈடுபாட்டை வலுப்படுத்தும் அதே வேளையில், ஜி-20 மற்றும் தற்போதுள்ள ஏற்பாடுகளுக்கு அப்பால் நாம் சிந்திக்கலாம் என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

இந்தியா போன்ற வளரும் நாடுகள் மேம்படுத்தப்பட்ட பருவநிலை இலக்குகளை அடைவதற்கான நிதி, தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் திறன் மேம்பாட்டு ஆதரவு உள்ளிட்ட செயல்படுத்தும் வழிமுறைகளை வழங்குவதன் முக்கியத்துவம் குறித்தும் இரு தரப்பினரும் விவாதித்தனர்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1820099

******


(Release ID: 1820178) Visitor Counter : 139


Read this release in: English , Urdu , Hindi , Marathi