அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
ஆராய்ச்சி மதிப்பீடுகளை மேலும் வலுவாக்குவதற்கான வழிமுறைகள் குறித்து அறிவியல் நிர்வாகிகள் ஆலோசனை
Posted On:
25 APR 2022 3:59PM by PIB Chennai
ஆராய்ச்சி மதிப்பீடு முறைகளை மேலும் வலுவானதாகவும், உள்ளடக்கியதாகவும் மாற்றுவதற்கான வழிமுறைகள் குறித்து மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களையும் சேர்ந்த அறிவியல் நிர்வாகிகள் விவாதித்துள்ளனர். இந்தியாவிற்குத் தேவையான புதிய சிந்தனைகளை ஊக்குவித்து, இளம் திறமையாளர்கள் உரிய வாய்ப்பை பெறுவது குறித்தும், இந்திய நிதியுதவி நிறுவனங்களின் ஆராய்ச்சி மதிப்பீட்டு நடைமுறைகள் குறித்து நடைபெற்ற பயிலரங்கில் விவாதிக்கப்பட்டது.
இந்த பயிலரங்கில் பேசிய மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை செயலாளர் டாக்டர் எஸ்.சந்திரசேகர், “உலகம் முழுவதும் ஆராய்ச்சி மதிப்பீடு ஒரு பெரும் சவாலாக உள்ள நிலையில், இதனை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளை உலகம் முழுவதும் உள்ள வல்லுனர்கள் ஆராய்ந்து வருகின்றனர். இந்தியாவும் தனது ஆராய்ச்சி மதிப்பீடு முறைகளை சுயமாக உருவாக்குவதோடு, அவற்றின் விளைவுகள் மற்றும் பயன்கள் நாட்டில் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
ஆய்வாளர்களின் உணர்திறனை மேம்படுத்த மேலும் பல பயிலரங்குகளை நடத்த வேண்டியது அவசியம் என்றும் டாக்டர் சந்திரசேகர் தெரிவித்தார்.
மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை ஏற்பாடு செய்திருந்த இந்த ஒருநாள் பயிலரங்கில், அரசின் பல்வேறு நிலைகளில் உள்ள அறிவியல் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1819840
***************
(Release ID: 1819866)
Visitor Counter : 176