நிலக்கரி அமைச்சகம்
சிஎம்சிடிஐஎல் தொடர்ந்து கோல் இந்தியா நிறுவனத்தின் துணை நிறுவனமாக செயல்படும்
Posted On:
25 APR 2022 3:10PM by PIB Chennai
அண்மையில் சில ஊடகங்களில் வெளியான உறுதிப்படுத்தப்படாத செய்தியில், மத்திய சுரங்க திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு நிறுவனம் (CMPDIL) தாது அபிவிருத்தி கழகத்துடன் இணைக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய நிலக்கரி அமைச்சகம், கோல் இந்தியா நிறுவனத்தின் துணை நிறுவனமான CMPDIL, நிலக்கரி வெட்டி எடுக்கும் பணிகள் மற்றும் நிலக்கரி துறைக்கு தேவையான ஆலோசனை சேவைகளை வழங்கி வருவதாக தெரிவித்துள்ளது. மற்ற தாது உற்பத்தியிலும், வர்த்தகத்தை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகளை கருத்தில் கொண்டு, இந்த நிறுவனத்தை வலுப்படுத்த திட்டமிட்ட மத்திய அரசு, தாது அபிவிருத்தி கழகத்தை மத்திய சுரங்க திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு நிறுவனம் (CMPDIL) உடன் இணைப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டது.
தாது அபிவிருத்தி கழகம் நிலக்கரி அல்லாத பிறவகை தாது உற்பத்தி மற்றும் ஆலோசனை தொடர்பான பணிகளில் மிகுந்த நிபுணத்துவம் பெற்றுள்ளது. எனவே, இத்தகைய இணைப்பு மற்றும் ஒருங்கிணைந்த தாது உற்பத்தி மற்றும் ஆலோசனை அமைப்பு ஒன்றை உருவாக்குவது, நிலக்கரி மற்றும் நிலக்கரி அல்லாத துறைகளின் வளர்ச்சி மற்றும் மதிப்பு கூட்டுதலுக்கு உதவிகரமாக இருக்கும். அதேவேளையில் CMPDIL தொடர்ந்து கோல் இந்தியா நிறுவனத்தின் துணை நிறுவனமாகவே இயங்கும்.
***************
(Release ID: 1819862)
Visitor Counter : 234