ரெயில்வே அமைச்சகம்

வர்த்தக வருவாய் மற்றும் கட்டணமில்லாத வருவாய் ஒப்பந்தங்களுக்கான மின்னணு ஏல முறைக்கு முன்னோடி திட்டத்தை இந்திய ரயில்வே தொடங்கியுள்ளது

Posted On: 22 APR 2022 5:33PM by PIB Chennai

9 மண்டல ரயில்வேக்களின் 11 கோட்டங்களில் வர்த்தக வருவாய் மற்றும் கட்டணமில்லாத வருவாய் ஒப்பந்தங்களுக்கான மின்னணு ஏல முறைக்கு முன்னோடி திட்டத்தை இந்திய ரயில்வே தொடங்கியுள்ளது.

இதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:

  • பார்சல் இடம், வாகன நிறுத்தும் பகுதிகள், வர்த்தக விளம்பர பகுதி, குத்தகைக்கான ஒப்பந்தங்கள்,
  • ஒப்பந்தத்தை விரைந்து இறுதி செய்தல், ஒப்பந்தம் ஏற்பட தவறினால் விரைந்து மறு ஏலம் விடுதல்
  • ஒப்பந்ததாரர்கள் / விண்ணப்பதாரர்கள் பதிவு செய்யவும், பங்கேற்கவும்  புவி எல்லைக்கட்டுப்பாடு எதுவும் இல்லை.
  • ஐஆர்இபிஎஸ் மூலம் மட்டுமே இணையவழியாக மின்னணு ஏலம்  நடைபெறும்.
  • ஏலம் விடுவதற்கு குறைந்தபட்சம் 12 நாட்களுக்கு முன்னதாக ஏலம் பற்றிய விவரங்கள் வெளியிடப்படும்.
  • தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்தில் மூத்த கோட்ட வர்த்தக மேலாளரை 9003061951 என்ற செல்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

ஆர்வமுள்ளவர்கள் ஐஆர்இபிஎஸ்-ன்  இணையதளத்தில்  (www.ireps.gov.in.) கூடுதல் தகவல்கள் மற்றும் கோட்டவாரியான மின்னணு ஏல தேதிகளை அறிந்துகொள்ளலாம்.

இணையதளம் மூலமாக பதிவு செய்வதற்கு மேற்காணும் இணையதளத்தில் உள்ள ஐஆர்இபிஎஸ் உதவி மேசை (IREPS Helpdesk) என்பதை அணுகலாம்.

**************



(Release ID: 1819093) Visitor Counter : 218


Read this release in: English , Urdu , Hindi