வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (DPIIT) முதலீட்டாளர் வட்ட மேசை மாநாட்டை நடத்துகிறது
இடுகை இடப்பட்ட நாள்:
21 APR 2022 7:22PM by PIB Chennai
முதலீட்டாளர்களின் வணிக அனுபவங்களை மேம்படுத்தும் வகையில்,தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத்துறை, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம், இன்வெஸ்ட் இந்தியாவுடன் இணைந்து முதலீட்டாளர்களின் வட்டமேசை மாநாட்டை ஏப்ரல் 20-ம் தேதி நடத்தியது.
இந்தியாவில் உள்ள வாய்ப்புகளை வெளிப்படுத்துவது மற்றும் அவர்களின் இந்தியாவில் தொழில் புரிவது / விரிவாக்கத் திட்டங்களைக் கையாள்வது ஆகியவை குறித்து இம்மாநாட்டில் கவனம் செலுத்தப்பட்டது.
தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத்துறையின் செயலாளர் திரு அனுராக் ஜெயின், நீண்ட கால வணிக உறவுகள் மற்றும் தொழில்துறைக்கும் அரசுக்கும் இடையே தொடர்ச்சியான உரையாடல்களின் அவசியத்தை வலியுறுத்தினார். இந்தியாவில் தொற்றுநோய்க்குப் பிந்தைய மீட்பு நடவடிக்கைகள் வேகமாக உள்ளது என்றும், இந்தியாவில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கை அதிகரித்து வருவதாகவும் அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1818792
***************
(வெளியீட்டு அடையாள எண்: 1818804)
வருகையாளர் எண்ணிக்கை : 218