எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மின்சாரம் தொடர்பான தரவுகள் உருவாக்கம் மற்றும் முடிவுகளை தீர்மானிக்க உதவி செய்தல் குறித்த பயிற்சி திட்டத்திற்கு மின்சார நடைமுறை செயலாக்கக் கழகம் (POSOCO) ஏற்பாடு செய்துள்ளது

Posted On: 20 APR 2022 1:58PM by PIB Chennai

மின்சாரம் தொடர்பான தரவுகள் உருவாக்கம் மற்றும் முடிவுகளை தீர்மானிக்க உதவி செய்தல் குறித்த பயிற்சி திட்டத்திற்கு மின்சார நடைமுறை செயலாக்கக் கழகம் (பொசோகோ) புதுதில்லியில் ஏற்பாடு செய்துள்ளது. 2022 ஏப்ரல் 18-ல் தொடங்கி 29-ல் நிறைவடையும் இந்த பயிற்சி திட்டத்தில் பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, நேபாளம், இலங்கை ஆகியவற்றைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.  ஒருங்கிணைந்த ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான செயல்திட்ட அமைப்புடன் இணைந்து இந்த பயிலரங்கு நடத்தப்படுகிறது. 

மத்திய மின்துறை செயலாளர் திரு அலோக் குமார், பயிலரங்கை தொடங்கி வைத்தார்.  தேசிய மின்தொகுப்பை இயக்குகின்ற பொசோகோ-வை சேர்ந்த பொறியாளர்களால் பயிற்சி அளிக்கப்படுகிறது,  முக்கியமான செயல்பாட்டு பகுதிகளில்  சுயமதிப்பீடு பரிசோதனைகளும் இதில் அடங்கும்.  இதுதவிர, மூத்த நிர்வாகிகள் மற்றும் தொழில்துறை நிபுணர்களுடன் கலந்துரையாடல் அமர்வுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  ஆக்ராவில் உள்ள அதிக வோல்ட் திறன் கொண்ட நேரடி மின்சார நிலையமான உலகின் முதலாவது பல்வகை முனையத்தை நேரில் பார்வையிடும் வாய்ப்பை பங்கேற்பாளர்கள் பெறுவார்கள். 

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:   https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1818334

 ***************  


(Release ID: 1818470) Visitor Counter : 137