உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
ட்ரோன்கள் மற்றும் ட்ரோன் உதிரிபாகங்களுக்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் 14 பயனாளிகளின் முதல் தற்காலிக பட்டியல் வெளியீடு- தமிழகத்தை சேர்ந்த 2 நிறுவனங்கள் இடம்பெற்றன
Posted On:
20 APR 2022 5:45PM by PIB Chennai
ட்ரோன் மற்றும் ட்ரோன் உதிரிபாகங்களுக்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் 14 பயனாளிகளின் முதல் தற்காலிக பட்டியலை விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
ஐந்து ட்ரோன் உற்பத்தியாளர்கள் மற்றும் ஒன்பது ட்ரோன் பாகங்கள் தயாரிப்பாளர்கள் இதில் அடங்குவர். 10 மார்ச் 2022 அன்று தகுதியான உற்பத்தியாளர்களிடமிருந்து விண்ணப்பங்களை அமைச்சகம் வரவேற்றது. விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 31 மார்ச் 2022 ஆக இருந்தது.
ஏப்ரல் 2021 முதல் ஜனவரி 2022 வரையிலான பத்து மாத காலத்திற்கு விண்ணப்பதாரர்கள் சமர்ப்பித்த நிதித் தரவுகளின் அடிப்படையில் பயனாளிகளின் தற்காலிகப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. பட்டியல் மேலும் விரிவாக்கப்படலாம்.
பயனாளிகளின் இறுதிப் பட்டியல் அவர்களின் நிதி முடிவுகள் மற்றும் பிற குறிப்பிட்ட ஆவணங்களின் விரிவான ஆய்வுக்குப் பிறகு ஜூன் 30, 2022-க்குள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பட்டியலில் இடம்பெற்றுள்ள ட்ரோன் உற்பத்தியாளர்களின் விவரம் பின்வருமாறு:
தக்ஷா அன்மேண்டு சிஸ்டம்ஸ், சென்னை, தமிழ்நாடு
ஐடியா ஃபோர்ஜ் டெக்னாலஜி, மும்பை, மகாராஷ்டிரா
ஐஓ டெக் வேர்ல்டு ஏவிகேஷன், குருகிராம், ஹரியானா
ஓம்னிப்ரெசென்ட் ரோபோ டெக்னாலஜிஸ், குரிகிராம், ஹரியானா
ராஃபே எம்பிபிஆர், நொய்டா, உத்தரப்பிரதேசம்
பட்டியலில் இடம்பெற்றுள்ள ட்ரோன் பாகங்கள் உற்பத்தியாளர்களின் விவரம் பின்வருமாறு:
அப்சல்யூட் காம்போசைட்ஸ், பெங்களூர், கர்நாடகா
அதானி-எல்பிட் அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் இந்தியா, ஹைதராபாத், தெலங்கானா
ஆட்ராய்டெக் இன்ஃபர்மேஷன் சிஸ்டம்ஸ், புது தில்லி
ஆல்பா டிசைன் டெக்னாலஜிஸ், பெங்களூரு, கர்நாடகா
இன்வென்ட்கிரிட் இந்தியா, சம்பல்பூர். ஒடிசா
பாரஸ் ஏரோஸ்பேஸ், பெங்களூரு, கர்நாடகா
சாஸ்மோஸ் ஹெட் டெக்னாலஜிஸ், பெங்களூரு, கர்நாடகா
இசட் மோஷன் ஆட்டோனாமஸ் சிஸ்டம்ஸ், பெங்களூரு, கர்நாடகா
ஜூப்பா ஜியோ நேவிகேஷன் டெக்னாலஜிஸ், சென்னை, தமிழ்நாடு
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1818424
***************
(Release ID: 1818465)
Visitor Counter : 210