பாதுகாப்பு அமைச்சகம்

ஆறாவது ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பலான ‘வாக்ஷீர்’ மும்பை மசகான் டாக் லிமிடெட்டில் தொடங்கப்பட்டது

Posted On: 20 APR 2022 5:43PM by PIB Chennai

இந்திய கடற்படையின் திட்டம் 75-ன் கல்வாரி வகை நீர்மூழ்கிக் கப்பலின் ஆறாவது மற்றும் கடைசி நீர்மூழ்கிக் கப்பலான யார்டு 11880,  மசாகோன் டாக் லிமிடெட்  கன்ஹோஜி ஆங்ரே வெட் தளத்தில் இருந்து இன்று ஏவப்பட்டது.

பாதுகாப்பு செயலாளர் டாக்டர் அஜய் குமார் விழாவில் தலைமை விருந்தினராக கலந்துகொண்டார். ஏவுதல்/பெயரிடுதல் ஆகியவை

பெண்மணியால் செய்யப்பட வேண்டும் என்ற கடற்படை மரபுகளின்படி, திருமதி வீணா அஜய் குமார் ‘வாக்ஷீர்’ நீர்மூழ்கிக் கப்பலை தொடங்கி வைத்தார்.

மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி வைஸ் அட்மிரல் ஏ பி சிங், கடற்படைத் துணைத் தலைவர் வைஸ் அட்மிரல் எஸ் என் கோர்மேட் மற்றும் மேற்கு கடற்படை தலைமையகத்தைச் சேர்ந்த உயரதிகாரிகள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

திட்டம்-75 நீர்மூழ்கிக் கப்பல்கள் டிசம்பர் 2017 முதல் கடற்படையில் இணைக்கப்பட்டன, தற்போது இந்தத் திட்டத்தின் நான்கு நீர்மூழ்கிக் கப்பல்கள் இந்திய கடற்படையில் செயல்படுகின்றன. ஐந்தாவது நீர்மூழ்கிக் கப்பல் கடல் சோதனைகளுடன் முன்னேறி வருகிறது.

ஆறாவது நீர்மூழ்கிக் கப்பல் கடுமையான பரிசோதனைகளுக்குப் பின்னர் அடுத்த ஆண்டு பிற்பகுதியில் இந்திய கடற்படைக்கு வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1818422

 

***************



(Release ID: 1818464) Visitor Counter : 547


Read this release in: English , Urdu , Hindi