குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த மதுபாலா நிதி சுதந்திரத்தை அடைய உதவிய என்எஸ்ஐசி
Posted On:
19 APR 2022 4:25PM by PIB Chennai
இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி பகுதியை சேர்ந்தவர் மதுபாலா. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் தேசிய சிறு தொழில்கள் நிறுவனத்தின் (என்எஸ்ஐசி) கீழ் ஒரு வருடகால ஃபேஷன் வடிவமைப்பு பயிற்சி பெற்ற அவர், துணிகளை வெட்டுதல் மற்றும் தைத்தல் பணியை கற்றார்.
சொந்தமாக துணிக்கடை ஒன்றை ஆரம்பிக்கவும் நிதி சுதந்திரத்தை அடையவும் அவருக்கு இது உதவியது. "என்எஸ்ஐசி பயிற்சியின் மூலம் ஃபேஷன் வடிவமைப்பு குறித்தும் துணிகளை வெட்டுதல் மற்றும் தைத்தல் குறித்தும் நான் நிறைய கற்றேன்," என்று அவர் கூறுகிறார்.
"அந்த பயிற்சி எனக்கு பெரிய அளவில் உதவியதோடு தற்போது நான் மதுபாலா பொட்டிக் எனும் கடையை நடத்தி வருகிறேன். மாதம் ரூபாய் 10,000 என்னால் ஈட்ட முடிகிறது," என்று அவர் மேலும் தெரிவிக்கிறார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1818052
***************
(Release ID: 1818052)
(Release ID: 1818071)
Visitor Counter : 193