குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வெற்றிக்கதை: தொழிலுக்கு ஊக்கமளிக்கும் என்எஸ்ஐசி

प्रविष्टि तिथि: 19 APR 2022 4:21PM by PIB Chennai

கான்பூரின் நசீம் பாக் என்னுமிடத்தைச் சேர்ந்த திரு.இஷான் உல்லா, ஈஸ்ட் வெஸ்ட் டேனர்ஸ் என்னும் தொழில் அலகு ஒன்றை சொந்தமாக நடத்தி வருகிறார். அங்கு காலணிகள் உள்ளிட்ட அனைத்து விதமான தோல் பொருட்கள், ஆடைகள், ஜவுளிகளை அவர் உற்பத்தி செய்கிறார்.

தேசிய சிறுதொழில்கள் கழகம் என்எஸ்ஐசியின் ஆதரவுடன் தற்போது அவரது நிறுவனம் ஆண்டுக்கு ரூ.15 கோடி விற்று முதல் கண்டுள்ளது. என்எஸ்ஐசி தற்போது அவரது நிறுவனத்தின் பொருட்களை சந்தைப்படுத்துவதற்காக பதிவு செய்துள்ளது. இடபிள்யுடி என்ற வணிக முத்திரையுடன் இந்தப் பொருட்கள் சந்தைப்படுத்தப்படும். திரு.இஷான் உல்லா ரூ.1 லட்சம் முதலீட்டில் 1999 ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தை தொடங்கினார்.

தனது தொழில் மூலம் வேலைவாய்ப்பை அதிகரிப்பதே அவரது நோக்கமாக உள்ளது. மேலும் வாடிக்கையாளர்களின் திருப்திக்கு ஏற்ப சிறந்த சேவை, கட்டுபடியான விலை, நல்ல தரம், உரிய நேரத்தில் விநியோகம் என்ற நிலையை தக்க வைப்பதும் அவரது நோக்கமாகும்.

***********



(Release ID: 1818050)


(रिलीज़ आईडी: 1818069) आगंतुक पटल : 225
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi