அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
ஜம்மு-காஷ்மீரில் உள்ள பள்ளி பஞ்சாயத்தில் பிரதமரின் வருகையை ஒட்டி சாதனை காலத்தில் நிறுவப்பட்ட சூரிய மின்சக்தி ஆலையை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் பார்வையிட்டார்
Posted On:
19 APR 2022 2:35PM by PIB Chennai
பஞ்சாயத்துராஜ் தினத்தை முன்னிட்டு ஏப்ரல் 24 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி ஜம்மு-காஷ்மீருக்கு வருகை தர உள்ள நிலையில், சம்பா மாவட்டத்தில் பள்ளி பஞ்சாயத்தில் 500 கிலோ வாட் சூரிய சக்தி ஆலைக்கான பணிகள் சாதனை காலத்தில் விரைந்து முடிக்கப்பட்டு தற்போது ஆலை தயாராக உள்ளது.
ஆலையை இன்று பார்வையிட்டு சோதனை ஓட்டத்தை ஆய்வு செய்த பிறகு மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); புவி அறிவியல் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் இதை தெரிவித்தார்.
இந்த சூரிய சக்தி ஆலையை பயன்பாட்டுக்கு வந்த பின்னர் கிராமத்தில் உள்ள சுமார் 340 வீடுகள் கரியமில வாயு உமிழ்வில் இருந்து விடுவிக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஜுகல் கிஷோர் சர்மா, பிரதமரின் வருகையை முன்னிட்டு குறுகிய காலத்தில் சூரிய சக்தி ஆலையை நிறுவிய மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு ஜெயப்பிரகாஷ் ஜெயின் உள்ளிட்டோர் அமைச்சர் உடனிருந்தனர்.
விஞ்ஞானிகள் மற்றும் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளும் அங்கு இருந்தனர். கிராமத்தில் உள்ள 340 வீடுகளுக்கு தூய்மையான மின்சாரத்தையும் வெளிச்சத்தையும் வழங்க உள்ள 500 கிலோ வாட் சூரிய சக்தி ஆலை வெறும் 20 நாட்களில் நிறுவப்பட்டதாக டாக்டர் ஜிதேந்திர சிங் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
பிரதமரின் ஜம்மு நிகழ்ச்சியை முன்னிட்டு கடந்த இரு வாரங்களாக மத்திய அமைச்சர்கள் டாக்டர் ஜிதேந்திர சிங் மற்றும் திரு கிரிராஜ் சிங் ஆகியோர் இடையே புதுதில்லியில் பல்வேறு கூட்டங்கள் நடைபெற்றது நினைவிருக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1818002
***************
(Release ID: 1818002)
(Release ID: 1818028)
Visitor Counter : 213