வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி நவீன நகரங்களுக்கான இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்; நவீன நகரங்களுக்கான இயக்கத்தில் 90 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிதியுதவி திட்டங்களில் கிட்டத்தட்ட 100% பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்

Posted On: 18 APR 2022 4:25PM by PIB Chennai

“நவீன நகரங்கள், நவீன நகரமயமாக்கல் குறித்த 3 நாள் மாநாடு சூரத்தில் இன்று பிரம்மாண்டமாகத் தொடங்கியது. நாட்டின் 75-வது விடுதலைப்பெருவிழாக்  கொண்டாட்டத்தின் கீழ், மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை  அமைச்சகம் (MoHUA), சூரத் ஸ்மார்ட் சிட்டி கார்ப்பரேஷன் டெவலப்மென்ட் லிமிடெட் உடன் இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

இந்நிகழ்ச்சியில் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். குஜராத் மாநில முதலமைச்சர் திரு பூபேந்திரபாய் படேல் வீடியோ பதிவின்  மூலம் கூட்டத்தில் உரையாற்றினார். மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் திரு  கவுசல் கிஷோர், மத்திய ரயில்வே இணை அமைச்சர் திருமதி தர்ஷனா ஜர்தோஷ், மாநில நகர்ப்புற வளர்ச்சி மற்றும்  நகர்ப்புற வீட்டுவசதி அமைச்சர்,திரு வினோத் மொராடியா,  ஆந்திரப் பிரதேச மாநில கல்வி அமைச்சர் டாக்டர் ஆதிமுலபு சுரேஷ் நாடாளுமன்ற உறுப்பினர் திரு சி.ஆர். பாட்டீல்,  மற்றும் சூரத் நகர மேயர் திருமதி. ஹேமலி கல்பேஷ்குமார் போகாவாலா ஆகியோர் தொடக்க அமர்வில் பங்கேற்றனர். மத்திய, மாநில அரசுகளின் அனைத்து முக்கிய நகர்ப்புற பங்குதாரர்களும், உயரதிகாரிகளும்  இந்நிகழ்ச்சியில்  கலந்து கொண்டனர்.

இந்தியாவின் நவீன நகரங்களுக்கான விருதுகள் போட்டியின் (ஐஎஸ்ஏசி) 2020-ம் ஆண்டுக்கான விருது வென்றவர்களுக்கு நடைபெற்ற  பாராட்டு விழாவின் போது, விருதுகள் வழங்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டது.  முன்னதாக, 2021-ம் ஆண்டில் நடைபெற்ற மெய்நிகர் மாநாட்டின் மூலம் இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டன. இருப்பினும், கோவிட்-19 தொற்று பரவல் காரணமாக விருது வழங்கும் விழா ஒத்திவைக்கப்பட்டது. சிறந்த நகரத்திற்கான விருது சூரத் மற்றும் இந்தூருக்கும், சிறந்த மாநிலத்திற்கான விருது உத்தரப் பிரதேசத்துக்கும் வழங்கப்பட்டது. விருது பெற்றவர்களின் பட்டியல் இணைப்பு I, II இல் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், 'எளிதாக வாழ்வது', 'நகராட்சி செயல்திறன் குறியீடு', 'தரவு முதிர்வு மற்றும் பருவநிலை, நவீன நகரங்களின் மதிப்பீட்டு கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் அடங்கிய நகர்ப்புற விளைவுகளின் கட்டமைப்பு -2022 வெளியிடப்பட்டது. அமைச்சகத்தின் ஒருங்கிணைந்த தரவு இணையதளத்தில் AMPLIFI, இந்திய நகரங்கள் பற்றிய மதிப்புமிக்க தரவுகளை வழங்கும். மேலும், நவீன நகரங்களுக்கான இயக்கம், பல்வேறு தகவல்களை உள்ளடக்கிய கூடிய விரிவான தகவல் பலகையையும்  அறிமுகப்படுத்தியது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1817774

***************


(Release ID: 1817848) Visitor Counter : 352