உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் “உடான்“ திட்டம், தலைசிறந்த பொது நிர்வாகத்திற்கான பிரதமரின் விருதுக்கு தேர்வு

प्रविष्टि तिथि: 16 APR 2022 1:11PM by PIB Chennai

மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின், பிராந்திய இணைப்புக்கான முன்னோடித் திட்டமான உடான், 2020-ம் ஆண்டுக்கான பொது நிர்வாகப் பிரிவில் சிறந்த திட்டத்திற்கான பிரதமரின் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.   “மத்திய அரசின் புதுமைக் கண்டுபிடிப்பு(பொது)“  பிரிவின்கீழ் இந்த விருது வழங்கப்பட உள்ளது.  

மத்திய / மாநில அரசு நிறுவனங்கள் மற்றும் மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் தலைசிறந்த மற்றும் புதுமையான திட்டங்களை அங்கீகரித்து, பெருமைப்படுத்தும் விதமாக, மத்திய அரசு, இந்த விருதை ஏற்படுத்தியுள்ளது. இலக்குகளை எட்டி சாதனை படைப்பது மட்டுமின்றி,  நல்லாட்சி,  தரமிக்க சாதனைகள், தொலைதூர இணைப்பு போன்றவற்றை ஊக்குவிக்கும் விதமாக இந்த விருது உருவாக்கப்ட்டுள்ளது.  இந்த விருது, ஒரு சுழற்கோப்பை, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ரூ.10லட்சம் ஊக்கத்தொகை ஆகியவற்றைக் கொண்டதாகம்.   

குடிமைப் பணியாளர் தினமான ஏப்ரல் 21-ந் தேதி, தில்லி விஞ்ஞான் பவனில் நடைபெறும் விழாவில், இந்த விருது சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திற்கு வழங்கப்படும்.   

உடான் திட்டத்தின்கீழ், 2024-ம் ஆண்டிற்குள் நாட்டில் 100 புதிய விமான நிலையங்களைக் கட்டவும், 2026-ம் ஆண்டிற்குள் 1,000 புதிய வழித்தடங்களில் விமானங்களை இயக்கவும், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டு, பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.   

 மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் :  https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1817267 

*****


(रिलीज़ आईडी: 1817325) आगंतुक पटल : 415
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri