பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்

மூன்றாவது தேசிய ஆன்லைன் வினாடி வினாவை தொடங்கவுள்ள ஐபிபிஐ

Posted On: 15 APR 2022 6:57PM by PIB Chennai

விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் ஒரு பகுதியாக, மைகவ்.இன் மற்றும் மும்பை பங்குச் சந்தையின் முதலீட்டாளர் பாதுகாப்பு நிதியத்துடன் இணைந்து திவாலதல் சட்டம், 2016 குறித்த மூன்றாவது தேசிய ஆன்லைன் வினாடி வினாவை ஐபிபிஐ எனப்படும் இன்சால்வன்சி அண்ட் பேங்க்ரப்சி போர்ட் ஆஃப் இந்தியா நடத்தவுள்ளது.

நாடு முழுவதுமுள்ள பல்வேறு பங்குதாரர்களிடையே திவாலதல் சட்டம், 2016 குறித்த விழிப்புணர்வு மற்றும் புரிதலை ஏற்படுத்தும் நோக்கத்துடன் தேசிய ஆன்லைன் வினாடி வினாவை ஐபிபிஐ நடத்தவுள்ளது.

ஏப்ரல் 16, 2022 முதல் மே 15 2022 வரை நடைபெறவுள்ள இந்த வினாடி வினாவில் கலந்து கொள்ள 18 வயதிற்கு மேற்பட்ட இந்தியர்கள் அனைவரும் தகுதியடைவர் ஆவர். https://quiz.mygov.in எனும் தளத்தில் இந்த போட்டி நடைபெறும்.

ஐபிபிஐ, மும்பை பங்குச் சந்தையின் முதலீட்டாளர் பாதுகாப்பு நிதியம் மற்றும் ஐபிபிஐ உடன் பதிவு செய்து கொண்டுள்ள சேவை வழங்குநர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் இந்த வினாடி வினா போட்டியில் கலந்து கொள்ள இயலாது.

முதல் பரிசாக ரூ 1 லட்சம் மற்றும் தங்கப் பதக்கமும், இரண்டாம் பரிசாக ரூ 50,000 மற்றும் வெள்ளிப் பதக்கமும், மூன்றாம் பரிசாக ரூ 25,000 மற்றும் வெண்கலப் பதக்கமும் வழங்கப்படும். அடுத்த 10 சிறந்த போட்டியாளர்களுக்கு ஆறுதல் பரிசாக தலா ரூ 10,000 வழங்கப்படும்.

இது குறித்த மேலதிக தகவல்களை https://www.ibbi.gov.in/events/upcoming-events மற்றும் https://quiz.mygov.in/quiz/3rd-national-online-quiz-on-the-insolvency-and-bankruptcy-code-2016/ எனும் இணைய முகவரிகளில் காணலாம்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1817110

----



(Release ID: 1817119) Visitor Counter : 219


Read this release in: English , Urdu , Hindi , Manipuri