அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
ஜம்மு பல்கலைக்கழகத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட துணைவேந்தர் பேராசிரியர் உமேஷ் ராய் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கை சந்தித்தார்
Posted On:
15 APR 2022 3:42PM by PIB Chennai
ஜம்மு பல்கலைக்கழகத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட துணைவேந்தர் பேராசிரியர் உமேஷ் ராய் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் (தனிப் பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங்கை சந்தித்தார். மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தொடர்பான பல்வேறு புதிய தொழில் துறைகள் மற்றும் இதர திட்டங்கள் கல்வி உதவி தொகை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட போன்றவற்றில் இந்த பல்கலைக்கழகத்தின் மாணவர்களை ஈடுபடுத்தி பதிவு செய்வதன் மூலம் அறிவியல் பாடத் திட்டத்தை ஒருங்கிணைக்க வேண்டும் என்று துணைவேந்தர் இந்த சந்திப்பில் கேட்டுக்கொண்டார்.
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் மத்திய அரசு ஊக்கப்படுத்த முயற்சி செய்யும் ஒருங்கிணைந்த அணுகுமுறைக்கான முன் மொழிவுடன் புதிய துணைவேந்தர் தாமே முன்வந்திருப்பது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். புதிய தொழில்களை நீடித்திருக்க பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி புதிய தொழில்களுடன் இணைக்கப்படவேண்டும். கல்விசார்ந்த நடைமுறைகள் மட்டும் ஒருங்கிணைக்கப்படுவதோடு ஆதாரங்களின் முதலீடுகளில் சமமான பங்குதாரர்களாக தொழில்துறையை உருவாக்குவதும் அவசியம் என்று அவர் கூறினார்.
பல்வேறு கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழக மாணவர்களுக்கு வழிகாட்டுவோர் திட்டத்தை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் தொடங்கியிருப்பதாக துணைவேந்தரிடம் தெரிவித்த டாக்டர் ஜிதேந்திர சிங், ஓர் ஆசிரியர் திறமைமிக்க மாணவரைத் தமது பொறுப்பில் எடுத்துக் கொண்டு அந்த மாணவரை வளர்த்து வாழ்வாதாரத்துடன் இணைந்த புதிய தொழில் செயல்பாட்டில் நீடிக்க செய்வது இந்தத் திட்டம் என்று கூறினார்.
தற்போது வடக்கு இந்தியாவின் கல்வியில் விரைந்து முன்னேறி வருவதாக ஜம்மு திகழ்கிறது என்று அமைச்சர் கூறினார். இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகம், மக்கள் தொடர்புக்கான இந்திய கல்விக் கழகம், ஒருங்கிணைந்த மருந்து பொருளுக்கான இந்தியக் கல்வி நிறுவனம், பதேர்வாவில் உள்ள உயர்ந்த மலைப்பகுதி மருந்திற்கான தேசிய கல்விக் கழகம், கத்துவாவில் உள்ள தொழில்துறை உயிரி தொழில்நுட்ப பூங்கா, ஜம்மு மத்திய பல்கலைக்கழகத்தில் உள்ள வடக்கு இந்தியாவின் முதலாவது விண்வெளி மையம் போன்ற ஜம்முவின் பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கு இடையே விரிவான ஒத்துழைப்புக்கு அமைச்சர் அழைப்பு விடுத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1817047
***********
(Release ID: 1817098)
Visitor Counter : 161