கலாசாரத்துறை அமைச்சகம்

பிரதமர்களின் அருங்காட்சியகத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி புது தில்லியில் இன்று திறந்து வைத்தார்

Posted On: 14 APR 2022 6:00PM by PIB Chennai

பிரதமர்களின் அருங்காட்சியகத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி புது தில்லியில் இன்று திறந்து வைத்தார். 

மத்திய கலாச்சாரம், சுற்றுலா மற்றும் வடகிழக்கு மண்டல மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி; கலாசாரம் மற்றும் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் திருமதி மீனாட்சி லேகி, மத்திய கலாச்சாரம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் திரு அர்ஜுன் ராம் மேக்வால்; நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் (NMML) நிர்வாகக் குழு தலைவர் திரு நிருபேந்திர மிஸ்ரா; முன்னாள் பிரதமர்களின் குடும்பத்தினர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், இன்று பல்வேறு விழாக்கள் கொண்டாடப்படுவதைக் குறிப்பிட்டார். பாபாசாகேப் அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்திய அவர், “அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைப்பதில் முக்கிய சிற்பியாக பாபாசாகேப் இருந்தார். அந்த அரசியலமைப்பு, நாடாளுமன்ற முறையின் அடிப்படையை நமக்கு வழங்கியது," என்று கூறினார். 

"நாடாளுமன்ற முறையின் முக்கிய பொறுப்பு நாட்டின் பிரதமரின் அலுவலகத்தில் உள்ளது. பிரதமர்களின் அருங்காட்சியகத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் வாய்ப்பு இன்று எனக்குக் கிடைத்திருப்பது எனது அதிர்ஷ்டம்," என்று அவர் தெரிவித்தார். 

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் பிரதமர்களின் குடும்பத்தினரை அவர் வரவேற்று வாழ்த்து தெரிவித்தார்.
“நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் இந்த வேளையில், இந்த அருங்காட்சியகம் ஒரு பெரிய உத்வேகமாக அமைந்துள்ளது," என்றி பிரதமர் தெரிவித்தார். இந்த 75 ஆண்டுகளில் நாடு எத்தனையோ பெருமைக்குரிய தருணங்களைக் கண்டுள்ளது என்றும், வரலாற்றின் சாளரத்தில் இந்த தருணங்களின் முக்கியத்துவம் ஒப்பிடமுடியாதது என்றும் அவர் தெரிவித்தார்.

சுதந்திர இந்தியாவில் அமைக்கப்பட்ட ஒவ்வொரு அரசம், நாட்டை தற்போதைய உயரத்திற்கு கொண்டு செல்வதில் பங்களித்துள்ளது என்றும் செங்கோட்டையிலிருந்தும் பலமுறை தாம் இதை மீண்டும் மீண்டும் கூறியிருப்பதாகவும் என்றும் பிரதமர் தெரிவித்தார். ஒவ்வொரு அரசாலும் பகிரப்பட்ட பாரம்பரியத்தின் உயிரோட்டத்தின்  பிரதிபலிப்பாக இந்த அருங்காட்சியகம் உள்ளது என்று பிரதமர் கூறினார். 

ஜனநாயகத்தின் இலக்குகளை அடைவதற்கு நாட்டின் ஒவ்வொரு பிரதமரும் மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளனர். அவர்களை நினைவு கூர்வது என்பது சுதந்திர இந்தியாவின் பயணத்தை அறிந்து கொள்ள உதவிடும் என்று அவர் குறிப்பிட்டார். இந்த அருங்காட்சியகத்திற்கு வருகை தரும் மக்கள், நாட்டின் முன்னாள் பிரதமர்களின் பங்களிப்பு, அவர்களின் பின்னணி, அவர்களின் போராட்டங்கள் மற்றும் படைப்புகளை நன்கு அறிந்து கொள்ள முடியும் என்று அவர் மேலும் கூறினார். 

பிரதமர்களில் பலர் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார். மிகவும் ஏழ்மையான, விவசாயக் குடும்பங்களில் இருந்து வரும் இத்தகைய தலைவர்கள் பிரதமர் பதவிக்கு வருவது நாட்டின் ஜனநாயகம் மற்றும் அதன் மரபுகள் மீதான நம்பிக்கையை வலுப்படுத்துகிறது, என்றார் அவர். 

சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் கூட இந்திய ஜனநாயக அமைப்பில் மிக உயர்ந்த பதவிகளை அடைய முடியும் என்ற நம்பிக்கையை இது  இளைஞர்களுக்கு அளிக்கிறது என்று திரு மோடி கூறினார். இந்த அருங்காட்சியகம் இளம் தலைமுறையினரின் அனுபவத்தை விரிவுபடுத்தும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். சுதந்திர இந்தியாவின் முக்கிய நிகழ்வுகளைப் பற்றி நமது இளைஞர்கள் எவ்வளவு தெரிந்து கொள்கிறார்களோ, அந்த அளவுக்கு அவர்களின் முடிவுகள் பொருத்தமானதாக இருக்கும் என்றார் அவர். 


இந்தியாவின் வளமான வரலாறு மற்றும் வளமான சகாப்தத்தை நினைவுகூர்ந்த பிரதமர், நாட்டின் பாரம்பரியம் மற்றும் நிகழ்காலம் பற்றிய சரியான விழிப்புணர்வைப் பரப்ப வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். திருடப்பட்ட பாரம்பரியமிக்க கலைப்பொருட்களை  வெளிநாட்டில் இருந்து திரும்ப கொண்டு வருவதில் மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகளை சுட்டிக்காட்டிய அவர், புகழ்பெற்ற பாரம்பரிய இடங்களை கொண்டாடவும், ஜாலியன் வாலா பாக் நினைவிடம், பஞ்சதீர்த் பாபாசாகேப் நினைவகம், சுதந்திர போராட்ட அருங்காட்சியகம், பழங்குடியினர் வரலாற்று அருங்காட்சியகம் போன்ற இடங்களில் சுதந்திர போராட்ட வீரர்களின் நினைவுகளை பாதுகாக்கும் அரசின் முயற்சிகள் குறித்து பேசினார். 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1816829 

 

*********
 



(Release ID: 1816876) Visitor Counter : 255


Read this release in: English , Urdu , Hindi , Manipuri