மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் அம்பேத்கர் பிறந்தநாளைத் துப்புரவு தொழிலாளர்களுடன் கொண்டாடினார்

Posted On: 14 APR 2022 5:14PM by PIB Chennai

சமத்துவம் நமது அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை அம்சமாக  உள்ளது. சமத்துவம் மற்றும் சமவாய்ப்புகள் குறித்த டாக்டர் பி.  ஆர். அம்பேத்கரின் தொலைநோக்குப் பார்வை நரேந்திர மோடி அரசின் அனைவரும் இணைவோம் அனைவரும் உயர்வோம்  என்பதை வலியுறுத்துவதன் மூலம் எதார்த்தமாக மாற்றப்பட்டுள்ளது. 

 

மத்திய மின்னணுதகவல் தொழில்நுட்பம்திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை இணையமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் பெங்களூருவில் உள்ள மகளிருக்கான தேசிய திறன் பயிற்சி நிறுவனத்தில் அம்பேத்கர் பிறந்தநாளைக் கொண்டாடினார். 

 

அங்கு மாணவர்கள்ஆசிரியர்கள்,  மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடிய அமைச்சர்,  இந்திய அரசியல் சட்டத்தின் சிற்பியான டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தேசக் கட்டமைப்பில் சிறப்பு முக்கியத்துவம் பெற்றிருப்பதாகக் கூறினார்.  பன்முகத்தன்மை கொண்ட தேசமாக இருப்பினும் பல்வேறு புவியியல் சூழலில் வாழ்ந்தாலும்  நம் அனைவருக்கும் பொது அடையாளமாக இருப்பது  இந்தியர்கள் என்பதுதான் என்றும் தெரிவித்தார்.  அம்பேத்கர் பிறந்த நாள் மற்றும் மகாவீரர் பிறந்த நாளையொட்டி அனைவருக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.  தேசிய திறன் மேம்பாட்டுப் பயிற்சி நிறுவனத்தின் மாணவர்கள்  ஏற்பாடு செய்திருந்த  கண்காட்சியை அவர் பார்வையிட்டார். போட்டித்  தன்மையில் நிலைத்திருக்க தாங்களாகவே  திறனை மேம்படுத்திக்கொள்ள அவர்களை ஊக்கப்படுத்தினார்.  இன்றைய காலத்திற்கு ஏற்ப டிஜிட்டல் திறனைக் கற்பது அவசியம் என்பதையும் அவர் எடுத்துரைத்தார்.  நரேந்திர மோடி அரசுக்கான நம்பிக்கை என்பது திறன் மேம்பாட்டில் மகளிருக்குக்  கூடுதல் வாய்ப்புகளை உருவாக்குவதாகும் என்று அவர் உறுதிபட தெரிவித்தார். 

 

இந்த நிகழ்ச்சிக்குப் பின் ஆஸ்டின் நகருக்குச் சென்ற அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் அங்கு டாக்டர் பி ஆர் அம்பேத்கர் உருவச்சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். காசி விஸ்வநாதர் மற்றும் வெல்லாரி அம்மன் கோவிலுக்குச் சென்ற அவர் துப்புரவு தொழிலாளர்களுடன் மதிய உணவு அருந்தினார். 

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1816803

 

 

**********


(Release ID: 1816835)
Read this release in: English , Urdu , Hindi , Telugu