சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பாபா சாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 132-வது பிறந்தநாளன்று நாடு அவருக்கு அஞ்சலி செலுத்தியது

Posted On: 14 APR 2022 3:20PM by PIB Chennai

பாரத ரத்னா பாபா சாகேப் டாக்டர் பி.ஆர்அம்பேத்கரின் 132-வது பிறந்தநாளான இன்று காலைநாடாளுமன்ற வளாகத்தில் உள்ள சன்சாத் பவன் புல்வெளியில் உள்ள பாபா சாகேப் சிலைக்கு குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

குடியரசுத் துணைத் தலைவர் திரு எம்வெங்கையா நாயுடுபிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா ஆகியோரும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கருக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் மற்றும் மத்திய அமைச்சர்கள்உயரதிகாரிகளும் அஞ்சலி செலுத்தினர்.

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது.

மேலும் விவரங்களுக்குஇந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1816766


(Release ID: 1816786) Visitor Counter : 177