பாதுகாப்பு அமைச்சகம்
இந்திய விமானப்படை மார்ஷல் அர்ஜன் சிங் நினைவு 3-வது ஹாக்கி போட்டி 2022
Posted On:
14 APR 2022 11:44AM by PIB Chennai
விமானப்படையின் மார்ஷல் அர்ஜன் சிங் நினைவு 3-வது ஹாக்கி போட்டி 2022 ஏப்ரல் 18 முதல் 23 வரை சண்டிகரில் நடைபெற உள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு முதல் விமானப்படை விளையாட்டுக் கட்டுப்பாட்டு வாரியம் (AFSCB) இந்த விளையாட்டுப் போட்டியை ஏற்பாடு செய்து வருகிறது. ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறும் தொடக்க விழாவின் போது நிர்வாகப் பொறுப்பில் உள்ள விமானப்படை அதிகாரி தலைமை விருந்தினராக பங்கேற்கிறார். இந்த விளையாட்டுப்போட்டியின் நிறைவு விழா விமானப்படை தளபதி தலைமையில் வரும் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறும்.
இந்த போட்டியின் 3-வது பதிப்பில் பங்கேற்க ராயல் கனடியன், மலேசியன், பங்களாதேஷ் மற்றும் இலங்கை விமானப்படைகளின் ஹாக்கி அணிகள் உட்பட இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து 12 புகழ்பெற்ற அணிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
விமானப்படை மார்ஷல் அர்ஜன் சிங்கின் ஹாக்கி விளையாட்டின் மீதான ஆர்வம் ஈடு இணையற்றது. போர்களில் மட்டுமின்றி விளையாட்டுத் துறையிலும் விமானப்படை வீரர்களுக்கு உத்வேகம் அளித்தவர் அவர் ஆவார். 2019 -ம் ஆண்டு பங்களாதேஷ் மற்றும் இலங்கையைச் சேர்ந்த விமானப்படை ஹாக்கி அணிகளின் பங்கேற்புடன் மார்ஷல் அர்ஜன் சிங் நினைவு 2-வது ஹாக்கி போட்டியை வெற்றிகரமாக நடத்தியதன் மூலம் விமானப்படை மார்ஷலின் நூற்றாண்டு நினைவுகூரப்பட்டது. சர்வதேச போட்டியாகவும் இது உயர்ந்தது. ஒருங்கிணைந்த ரயில் பெட்டித் தொழிற்சாலை (சென்னை) அந்தப் பதிப்பில் வெற்றி பெற்றது. ஏப்ரல் 15-ம் தேதி மார்ஷல் அர்ஜன் சிங் பிறந்த தினமாகும்.
பல்வேறு சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில், இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இந்திய விமானப்படை தொடர்ந்து விளையாட்டு வீரர்களை உருவாக்கி வருவதன் மூலம் நாட்டிற்கும், இந்திய விமானப் படைக்கும் விருதுகளை கொண்டு வந்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1816678
-----
(Release ID: 1816750)
Visitor Counter : 137