நிலக்கரி அமைச்சகம்
நிலக்கரி துறையில் சுரங்க விபத்து குறித்த அறிக்கையை பதிவேற்றம் செய்வதற்கான இணையதளத்தை திரு பிரஹலாத் ஜோஷி தொடங்கி வைத்தார்.
Posted On:
13 APR 2022 6:14PM by PIB Chennai
நிலக்கரி சுரங்கங்களில் நிகழும் விபத்துகளை உடனுக்குடன் அறிவிப்பதை உறுதி செய்வதற்காக நிலக்கரி அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட இணையதளத்தை, நிலக்கரி, சுரங்கங்கள் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி இன்று தொடங்கி வைத்தார். கோல் இந்தியா லிமிடெட் (சிஐஎல்) மூலம் விபத்துக்கான காரணத்தை அகற்றுவதற்கான மூல காரண பகுப்பாய்வு நுட்பங்களைப் பயன்படுத்தி விபத்து விசாரணையை எளிதாக்கும் வகையில் இந்த இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற விபத்துகளை குறைக்கும் நோக்கில் பல்வேறு விசாரணைகளின் பரிந்துரைகளின் பேரில் நிலக்கரி நிறுவனங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்கும் இந்த இணையத்தளம் உதவிடும்.
நிலக்கரிச் சுரங்கங்களில் பாதுகாப்புக்கான நிலைக்குழுவின் 47-வது கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் திரு ஜோஷி, நிலக்கரித் துறையில் பாதுகாப்பே முதன்மையானது என்றும், பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்வதற்கு நிதிப் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்குமாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அனைத்து நிலக்கரி நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தினார். கோவிட்-19 தொற்று பரவல் மற்றும் நிலக்கரி வயல் பகுதிகளில் நீடித்த பருவமழை ஆகிய சவால்கள் இருந்தபோதிலும், நிலக்கரி உற்பத்தியில் இந்த ஆண்டு மிகச் சிறந்த செயல்திறன் கொண்ட நிலக்கரி நிறுவனங்களை அவர் பாராட்டினார். நாட்டில் 2021-22-ம் நிதியாண்டில், 777.23 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி செய்து சாதனை படைக்கப்பட்டுள்ளதாகவும், இது கடந்த 2020-21-ம் நிதியாண்டில் நிலக்கரி உற்பத்தி 716 மில்லியன் டன் உடன் ஒப்பிடும்போது 8.55 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளதாக திரு ஜோஷி குறிப்பிட்டார். அதே நேரத்தில், 2020-21-ம் ஆண்டில் 690.71 மெட்ரிக் டன்னாக இருந்த நிலக்கரி ஏற்றுமதி 2021-22-ம் நிதியாண்டில் 18.43 சதவீதம் அதிகரித்து 818.04 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது.
தேசிய அளவிலான நிலைக்குழுவின் மிக உயர்ந்த முத்தரப்புக் குழு, பரஸ்பர ஒத்துழைப்பு, யோசனைகள் மற்றும் பரிந்துரைகளைப் பகிர்ந்து கொள்ளும் உணர்வில் நிலக்கரி சுரங்கங்களில் பாதுகாப்பு நிலை மற்றும் தற்போதைய நடவடிக்கைகளின் போதுமான தன்மை ஆகியவை குறித்து ஆய்வு செய்தது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் மத்திய தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள், சுரங்க பாதுகாப்பு இயக்குநரகத்தின் அதிகாரிகள் மற்றும் பொது மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த பல்வேறு நிலக்கரி நிறுவனங்களின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர்கள், தலைமைச் செயல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அமைச்சர் திரு ஜோஷி பின்வரும் நடவடிக்கைகளை பரிந்துரைத்தார்:
I. நிலக்கரி சுரங்கங்களில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அதிநவீன தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வது.
II. ஊழியர்களின் பாதுகாப்பு, ஆரோக்கியம் ஆகியவற்றிற்க்காக தொழில்சார் சுகாதார சேவைகள் உள்கட்டமைப்பு மற்றும் கண்காணிப்பு நடைமுறைகளை வலுப்படுத்துதல்.
III. பணியாளர்கள் மற்றும் PAF களுக்கு இடையே பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டை வழங்குவதற்கான நடவடிக்கைகள்.
IV. பொதுத்துறை நிறுவனங்களுக்குச் சொந்தமான சுரங்கங்கள், தனியார் நிலக்கரி சுரங்கங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் பணியமர்த்துதல்
V. சுரங்க பாதுகாப்பு தொடர்பான அனைத்து பங்குதாரர்களிடையே விழிப்புணர்வு மற்றும் உணர்திறனை மேம்படுத்துதல்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1816496
***************
(Release ID: 1816563)
Visitor Counter : 177