நிதி அமைச்சகம்

கிஃப்ட்-ஐஎஃப்எஸ்சி-யில் லாங்கிவிட்டி மையத்தை அமைக்க நிலைத்தன்மை நிதி தொடர்பான நிபுணர் குழு பரிந்துரை

Posted On: 13 APR 2022 3:43PM by PIB Chennai

பாங்க் ஆஃப் அமெரிக்கா (இந்தியா) தலைவர் திருமதி காக்கு நகாடே மற்றும் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் முன்னாள் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு கோபாலன் சீனிவாசனின் தலைமையில் லாங்கிவிட்டி (நீண்ட ஆயுள்) நிதி தொடர்பான நிபுணர் குழுவை சர்வதேச நிதிச் சேவை மையங்கள் ஆணையம் (ஐஎஃப்எஸ்சி) அமைத்திருந்தது. அதன் இறுதி அறிக்கையை ஐஎஃப்எஸ்சி தலைவரிடம் 12 ஏப்ரல் 2022 அன்று குழு சமர்ப்பித்தது.

உலகளவில் வளர்ந்து வரும் போக்குகளை ஆய்வு செய்த குழு, 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிக உற்பத்தி திறன் கொண்ட மக்கள்தொகைக் குழுவாக இன்னும் இருப்பதையும், உலகளவில் $15 டிரில்லியன் செலவின ஆற்றலுடன் நிதி அமைப்பின் செல்வந்த பகுதியாக இருப்பதையும் கண்டறிந்தது.

இப்பிரிவின் வளர்ச்சிக்கு நிதி சேவைத் துறையின் முக்கிய பங்கை எடுத்துக்காட்டி, கிஃப்ட்-ஐஎஃப்எஸ்சி-யில் முதல் சர்வதேச லாங்கிவிட்டி மையத்தை அமைப்பதற்கு குழு பரிந்துரைத்தது. மேலும், நீண்ட ஆயுள் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் மையம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் குழு பரிந்துரைத்தது.

வங்கிகள், ஓய்வூதிய நிதிகள், சொத்து மேலாண்மை நிதிகள், காப்பீட்டு நிறுவனங்கள் போன்ற முன்னணி பெரு நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து தீர்வுகள் காண வேண்டும் என்று அது பரிந்துரைத்தது.

 

இது குறித்து பேசிய திருமதி காகு நகாடே, “சுகாதாரம் மற்றும் மருத்துவ தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மனிதர்களின் ஆயுளை அதிகரித்துள்ளன. லாங்கிவிட்டி நிதி மையத்தை உருவாக்கும் நடவடிக்கை நீண்ட கால பார்வை, செல்வ மேலாண்மை, காப்பீடு, ஓய்வூதியம், வெள்ளி தொழில்முனைவு மற்றும் இடைநிலை சுற்றுலா ஆகியவற்றில் வாய்ப்புகளைத் திறக்கும்,” என்றார்.

குழுவின் அறிக்கையை கீழே உள்ள இணைய இணைப்பில் பார்க்கலாம்:

https://ifsca.gov.in/Viewer/ReportandPublication/29

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1816374

***************



(Release ID: 1816561) Visitor Counter : 107


Read this release in: English , Urdu , Hindi