அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
நவீன தொழில்நுட்பம் மூலம் விவசாயம், கிராமப்புற மீட்டுருவாக்கம் ஆகியவை கண்காட்சியின் முக்கிய சிறப்பம்சமாக இருக்கும்: டாக்டர் ஜிதேந்திர சிங்
Posted On:
13 APR 2022 4:48PM by PIB Chennai
நாடு முழுவதும் ஏப்ரல் 24-ம் தேதி பஞ்சாயத்து ராஜ் தினம்” கொண்டாட்டப்படுவதையொட்டி, ஜம்முவில் பிரதமர் பயணம் மேற்கொள்வதற்கு முன்னதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் (தனி பொறுப்பு) ; புவி அறிவியல் இணையமைச்சர் (தனிப் பொறுப்பு); பிரதமர் அலுவலகம், பணியாளர்கள், மக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் திரு கிரிராஜ் சிங் ஆகியோர் அங்குள்ள முக்கிய விஷயங்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்து விவாதித்தனர்.
ஜம்முவில் இம்மாதம் 24 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கான கண்காட்சி கருப்பொருள் குறித்து மத்திய அமைச்சர்கள் டாக்டர் ஜிதேந்திர சிங், கிரிராஜ் சிங் ஆகியோர் இன்று விவாதித்தனர்.
தேசிய “பஞ்சாயத்துராஜ் தினம்” நிகழ்ச்சியில் பிரதமரின் வருகைக்கு முன்னதாக நடந்த தொடர் ஆயத்த கூட்டத்தில், கிராமப்புற மேம்பாடு, பஞ்சாயத்து ராஜ், ஆறு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில், உயிரித் தொழில்நுட்பம், விண்வெளி, அணு ஆற்றல் மற்றும் புவி அறிவியல். துறைகள் உட்பட மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
கிராமப்புறங்கள் மற்றும் விவசாயத்திற்கு நன்மை பயக்கும் நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் கண்டுபிடிப்புகளைக் காட்சிப்படுத்தும் வகையில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் பல்வேறு துறைகள் மற்றும் பிரிவுகளால் பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சியின் கண்காட்சி அரங்கில் 25 முதல் 30 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1816423
***************
(Release ID: 1816527)
Visitor Counter : 167