இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் ‘சாம்பியன்களை சந்தியுங்கள்’ இயக்கத்தை பாராலிம்பிக் இரட்டை பதக்க வீரர் சிங்ராஜ் ஜம்மு காஷ்மீருக்கு கொண்டு சென்றார்

प्रविष्टि तिथि: 13 APR 2022 3:40PM by PIB Chennai

‘சாம்பியன்களை சந்தியுங்கள் இயக்கத்தின் மூலம் பள்ளிகளுக்கு சாம்பியன்கள்  செல்லும் பிரதமரின் தனித்துவமான முன் முயற்சி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதை அடுத்து படிப்படியாக இது நாடு முழுவதும் நடைபெற்றது.  இந்நிலையில் ஏப்ரல் 12 அன்று ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த மாணவர்களை நோக்கி  துப்பாக்கி சுடும் வீரர் சிங்ராஜ் அதானா இந்த இயக்கத்தை ஜம்மு காஷ்மீர் மாணவர்களிடம் கொண்டு சென்றார்.

உதம்பூர் மாவட்டம் ராம்நகரில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 75 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 200 மாணவர்கள் பங்கேற்றனர்.  இந்த மாணவர்களிடையே பேசிய சிங்ராஜ், ஆரோக்கியமான உடலையும், உறுதியையும்  பெற்றிருப்பது ஒருவருக்கு பாதி வெற்றியை அளித்து விடுகிறது என்றும்,  இதைத்தான் குழந்தைப் பருவத்தில் இருந்து தாம் கற்று வந்திருப்பதாகவும் கூறினார். இத்தகைய மாணவர்களுடன் கலந்துரையாடுதல் எங்களின் விளையாட்டுப் பயணம், ஊட்டச்சத்து, மனநிலை ஆகியவை தொடர்பான அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தல் என்பது எங்களைப் போன்ற விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பாக அமைகிறது என்றும் 39 வயது நிறைந்த ஹரியானா வீரர் இந்த நிகழ்வின் போது கூறினார்.

சுதந்திரத்தின் 75-வது ஆண்டுப் பெருவிழாவின் ஒரு பகுதியாக மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுக்கள் அமைச்சகமும், கல்வி அமைச்சகமும் கூட்டாக இந்த முன் முயற்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன.

மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1816371

***************


(रिलीज़ आईडी: 1816524) आगंतुक पटल : 129
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी