பாதுகாப்பு அமைச்சகம்

அமெரிக்க இந்தோ-பசிபிக் படைப்பிரிவின் தலைமையகத்தை பார்வையிட பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் ஹவாய் சென்றடைந்தார்

Posted On: 13 APR 2022 9:44AM by PIB Chennai

அமெரிக்க இந்தோ-பசிபிக் படைப்பிரிவின் தலைமையகத்தை பார்வையிட பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் ஏப்ரல் 12, 2022 அன்று ஹவாய் சென்றடைந்தார். வாஷிங்டன் டிசியில் இருந்து வந்திறங்கிய திரு ராஜ்நாத் சிங்கை, அமெரிக்க இந்தோ-பசிபிக் படைப்பிரிவின் தளபதி அட்மிரல் ஜான் அக்விலினோ வரவேற்றார்.

பல்வேறு ராணுவ பயிற்சிகள், கூட்டு நிகழ்வுகள், பரிமாற்றங்கள் உட்பட பரந்த அளவிலான செயல்பாடுகளை அமெரிக்க இந்தோ-பசிபிக் படைப்பிரிவு மற்றும் இந்திய ராணுவம்  கொண்டுள்ளன.

ஏப்ரல் 13, 2022 அன்று இந்தியாவுக்குத் திரும்புவதற்கு முன்னர் அமெரிக்க இந்தோ-பசிபிக் படைப்பிரிவின் தலைமையகம், பசிபிக் கடற்படை மற்றும் ஹவாயில் உள்ள பயிற்சி வசதிகளை அமைச்சர் பார்வையிடுவார். பசிபிக் தேசிய நினைவு கல்லறையில் மலர்வளையம் வைப்பதோடு, ​​அமெரிக்க ராணுவ பசிபிக் மற்றும் பசிபிக் விமானப்படைகளின் தலைமையகத்தை திரு ராஜ்நாத் சிங் பார்வையிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாஷிங்டன் டிசியில், பிரதமர் திரு நரேந்திர மோடியுடன் அமெரிக்க அதிபர் திரு ஜோ பைடன் காணொலி சந்திப்பை நடத்தினார். திரு ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் திரு ஆண்டனி பிளிங்கன் மற்றும் அமெரிக்க பாதுகாப்புச் செயலர் திரு லாயிட் ஆஸ்டின் ஆகியோர் முன்னிலையில் இது நடைபெற்றது.

பின்னர், ஏப்ரல் 11, 2022 அன்று, பாதுகாப்பு அமைச்சர் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்களது அமெரிக்க சகாக்களுடன் இணைந்து 4-வது இந்தியா-அமெரிக்க அமைச்சர்கள் 2+2 உரையாடலுக்குத் தலைமை தாங்கினர். பேச்சுவார்த்தைக்குப் பிறகு கூட்டு அறிக்கை வெளியிடப்பட்டது. 2+2 உரையாடலுக்கு முன், பென்டகனில் அமெரிக்க பாதுகாப்பு செயலாளருடன் திரு ராஜ்நாத் சிங் இருதரப்பு சந்திப்பை நடத்தினார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1816206

***************



(Release ID: 1816293) Visitor Counter : 119