சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
ஆயுஷ்மான் பாரத்-சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்கள் வழங்கும் தொலை-ஆலோசனை சேவைகளின் செயல்பாடுகள் குறித்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் சுகாதார அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மண்டவியா ஆய்வு
Posted On:
12 APR 2022 7:24PM by PIB Chennai
ஆயுஷ்மான் பாரத்-சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்கள் வழங்கும் தொலை-ஆலோசனை (டெலி-கன்சல்டேஷன்) சேவைகளின் செயல்பாடுகள் குறித்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் சுகாதார அமைச்சர்களுடன் இணைந்து ஆய்வு செய்வதற்கான காணொலி கூட்டத்தை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மண்டவியா இன்று நடத்தினார்.
அவசரகால எதிர்வினை தொகுப்பு-2-ன் முன்னேற்றம் குறித்தும் மத்திய அமைச்சர் ஆய்வு செய்தார். ஆயுஷ்மான் பாரத்-சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்களின் நான்காவது ஆண்டு விழா கொண்டாட்டம் குறித்த ஆலோசனைகளை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் இருந்து அவர் வரவேற்றார்.
ஆயுஷ்மான் பாரத்-சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்களின் நான்காவது ஆண்டு விழாவை 2022 ஏப்ரல் 16 முதல் 22 வரை விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் கீழ் மத்திய சுகாதார அமைச்சகம் ஒரு வார காலம் கொண்டாடுகிறது.
ஏப்ரல் 18 முதல் 22-ம் தேதி வரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஆயுஷ்மான் பாரத்-சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்களில் வட்ட அளவிலான விழாக்கள் நடத்தப்பட உள்ளன. யோகா குறித்த நிகழ்ச்சிகள் ஏப்ரல் 17 அன்று நடைபெறும்.
மேலும், இந்த விழாவின் போது காசநோய், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் அடிப்படை சுகாதார சேவைகள் தொடர்பான பரிசோதனைகள் நடத்தப்பட்டு மருந்துகள் வழங்கப்படும். உரிய சுகாதார நிபுணர்களுடன் தொலை ஆலோசனையும் நடைபெறும்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1816131
***************
(Release ID: 1816143)
Visitor Counter : 189