கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இளம் தொழில்முனைவோருக்கு மிகப்பெரிய வாய்ப்புகளை நீர்வழிகளால் வழங்க முடியும்: திரு சர்பானந்தா சோனோவால்

Posted On: 12 APR 2022 4:31PM by PIB Chennai

2000 கிலோமீட்டர் சுற்றளவில் 800 மில்லியன் மக்கள்தொகை கொண்ட பெரிய நகரங்கள் அமைந்திருப்பதால் நமது இளம் தொழில்முனைவோருக்கு நீர்வழிகள் மூலம் மிகப்பெரிய வாய்ப்புகள் கிடைக்கும் என்று மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழிகள் மற்றும் ஆயுஷ் அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால் கூறினார்.

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம், இந்திய உள்நாட்டு நீர்வழிகள் ஆணையம், இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு இணைந்து ஏற்பாடு செய்த இரண்டு நாள் நிகழ்வான நீர்வழிகள் மாநாடு 2022-ன் தொடக்க அமர்வில் பேசிய அவர், நீர்வழிச் சூழலியலின் முழுமையான வளர்ச்சியின் மூலம் நமது அண்டை நாடுகளுடன் வலுவான வணிக உறவுகளைப் பேண முடியும் என்றார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தற்சார்பு இந்தியா தொலைநோக்கு லட்சியத்தை நனவாக்க பங்களிக்கவும், நீர்வழித் துறையில் அரசுடன் இணைந்து செயலாற்றவும் தொழில்துறையினருக்கு அமைச்சர் அழைப்பு விடுத்தார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய அசாம் முதலமைச்சர் திரு ஹிமந்த பிஸ்வா சர்மா, பயணிகளுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான படகு சேவைகளை வழங்குவதற்காக 770 கோடியில் அசாம் உள்நாட்டு நீர் போக்குவரத்து திட்டத்தை அசாம் அரசு செயல்படுத்தி வருவதாகக் கூறினார். வடகிழக்கில் நீர்வழி சுற்றுச்சூழல் அமைப்பின் முக்கியத்துவம் பற்றி பேசிய அவர், "நீர்வழிகள் மூலம் சரக்குகளைக் கொண்டு செல்வது வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு உள்ளூர் தயாரிப்புகளுக்கு சர்வதேச சந்தையைத் திறக்கும்", என்றார்.

மத்திய வடகிழக்கு பிராந்திய வளர்ச்சி அமைச்சர் திரு ஜி கிஷண் ரெட்டி காணொலி மூலம் ஆற்றிய உரையில், வடகிழக்கில் உள்ள  ஏராளமான இயற்கை வளங்களின் திறனை உணர நீர்வழிகள் பெரிதும் உதவியாக இருக்கும் என்று கூறினார்.

மத்திய தகவல் தொடர்பு, மின்னணு - தகவல் தொழில்நுட்பம் மற்றும் ரயில்வே அமைச்சர் திரு அஷ்வினி வைஷ்ணவ் பேசுகையில், ரயில், சாலை மற்றும் நீர்வழிகள் அடங்கிய சரக்கு போக்குவரத்து கலவையில் நீர்வழித் துறையில் முடிந்தவரை அதிக பங்கை அடைய முயற்சிக்க வேண்டும் என்று கூறினார்.

பூட்டான் அரசின் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் திரு லியோன்போ லோக்நாத் சர்மா, பங்களாதேஷ் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு காலித் மஹ்முத் சௌத்ரி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பேசினர்.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1816034

***************


(Release ID: 1816122) Visitor Counter : 108