வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
தில்லியில் குப்பை கொட்டும் இடங்களை சரிசெய்வதற்கான உயர்மட்டக் கூட்டத்தை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் நடத்தியது
Posted On:
11 APR 2022 4:09PM by PIB Chennai
தில்லியில் உள்ள ஓக்லா, காஜிபூர் மற்றும் பால்ஸ்வா ஆகிய இடங்களில் உள்ள மூன்று பாரம்பரிய குப்பை கொட்டும் தளங்களை சரிசெய்வதில் எட்டப்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து விவாதிக்க வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தால் கூட்டப்பட்ட உயர்மட்ட கூட்டம் ஒன்று இன்று நடைபெற்றது.
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சக செயலாளர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் அமைப்புகளின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்திய நகரங்கள் முழுவதும் பாரம்பரிய குப்பை கொட்டும் இடங்களின் பிரச்சினை சுற்றுச்சூழல் குறித்த கவலைக்கு தொடர்ந்து ஆதாரமாக உள்ளது. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தால் செயல்படுத்தப்பட்டு வரும் தூய்மை இந்தியா இயக்கம்-நகர்ப்புறம் (2.0) நாட்டிலேயே முதன்முறையாக இலக்குடன் கூடிய முறையில் இந்த சவாலை ஏற்றுக்கொண்டுள்ளது.
கழிவு உற்பத்தியை நிர்வகித்தல் மற்றும் நகராட்சி திடக்கழிவுகளை நிலையான முறையில் பாதுகாப்பாக அகற்றுதல் ஆகிய திடக்கழிவு மேலாண்மை சங்கிலியின் இரு முனைகளிலும் தூய்மை இந்தியா இயக்கம்-நகர்ப்புற (2.0) திட்டத்தின் கவனம் உள்ளது
இந்த நோக்கத்திற்காக, 14 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள 60-0க்கும் மேற்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 963 லட்சம் மெட்ரிக் டன் மரபுவழி குப்பை தளங்ளுக்கு புத்தாக்கம் அளிக்க ரூ 4,152 கோடி மதிப்பிலான குப்பைகளை அகற்றும் திட்டங்களுக்கு அமைச்சகம் ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது.
தொடர்ந்து தகவல்களை பெற கீழ்காணும் இணையப்பக்கங்களை பார்க்கவும்
இணையதளம்: https://sbmurban.org/
முகநூல்: Swachh Bharat Mission - Urban
டிவிட்டர்: @SwachhBharatGov
இன்ஸ்டாகிராம்: sbm_urban
யூடியூப்: Swachh Bharat Urban
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1815657
***************
(Release ID: 1815732)
Visitor Counter : 171