தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

5ஜி செயல்பாட்டு மற்றும் கூட்டு திட்ட முன்முயற்சிக்கான விண்ணப்பங்களை தொலைத்தொடர்புத் துறை வரவேற்கிறது

Posted On: 11 APR 2022 4:23PM by PIB Chennai

பயனர் மற்றும் தொழில்துறை தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் வலுவான கூட்டுகளை 5ஜி சூழலில் அமைக்கும் நோக்கில் 5ஜி செயல்பாட்டு மற்றும் கூட்டு திட்ட முன்முயற்சிக்கான விண்ணப்பங்களை தொலைத்தொடர்புத் துறை வரவேற்றுள்ளது.

5ஜி வாய்ப்புகளை பெருக்கும் வகையில், தொலைத்தொடர்புத் துறை செயலாளரின் வழிகாட்டுதலின் கீழ், டிஜிட்டல் தொலைதொடர்பு ஆணைய உறுப்பினர் (தொழில்நுட்பம்) தலைமையில் அமைச்சகங்களுக்கு இடையேயான குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் அமைச்சகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, விவசாயம், சுகாதாரம், நகர்ப்புற விவகாரங்கள், கல்வி, மின்சாரம், சுரங்கங்கள், ஜல்சக்தி, வர்த்தகம், துறைமுகங்கள், ரயில்வே, கனரகத் தொழில்கள், சாலைப் போக்குவரத்து, சுற்றுலா போன்ற அமைச்சகங்களின் பிரதிநிதிகளைக் கொண்டு இக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

சேவை வழங்குநர்கள், தொடர்புடையத் துறையினர், தீர்வு வழங்குநர், உபகரணம், சென்சார் மற்றும் இதர பொருட்களின் விற்பனையாளர்கள், உள்ளிட்டோர் 5ஜி செயல்பாட்டு மற்றும் கூட்டு திட்ட முன்முயற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்தின் மாதிரி https://dot.gov.in/sites/default/files/5GVEPP%20Format.pdf?download=1  எனும் இணைப்பில் கிடைக்கும்.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1815660

***************


(Release ID: 1815707) Visitor Counter : 280


Read this release in: English , Urdu , Hindi