அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

புவி வெப்பமடைதல் தொடர்பான சவாலை எதிர்கொள்வதில் கார்பன் வெளியேற்றத்தை தடுக்கும் செயல்முறைகள் மற்றும் புதிய பொருட்களின் பயன்பாடுகள் மூலம் நம்பிக்கை ஒளியை ஏற்ற முடியும்.

Posted On: 11 APR 2022 2:07PM by PIB Chennai

பசுமைகுடில் வாயுவான மீத்தேன் வாயுவை, சுத்தமான ஹைட்ரஜன் வாயுவாக மாற்றும் ஒரு கலப்பினப் பொருளைக் கணக்கீட்டு ரீதியாக விஞ்ஞானிகள் குழு வடிவமைத்துள்ளது. கார்பன் டை ஆக்சைட் வாயுவை  எரிபொருள் அல்லாத தரத்திலான பயோஎத்தனாலில் இருந்து உயர் தூய்மையான ஹைட்ரஜனாக மாற்றும் செயல்முறையையும் இக்குழு  உருவகப்படுத்தியுள்ளது. அத்தகைய பொருட்களைச் சோதிக்கக்கூடிய ஒரு வசதியை வடிவமைத்ததுடன், கார்பன் தொடர்பான நிறுவன ஆராய்ச்சிகளிலும் இந்த விஞானிகள் குழு உதவிடும்.

பசுமைக்குடில் வாயுக்களின் புவி வெப்பமடைதல் திறனைக் கருத்தில் கொண்டு, விஞ்ஞானிகள் இந்த வாயுக்களை உறிஞ்சி பயனுள்ள பொருட்களாக மாற்றுவதற்கான புதுமையான முறைகளை ஆராய்ந்து வருகின்றனர். கிரீன்ஹவுஸ் வாயுக்களின் புவி வெப்பமடைதல் திறனைக் கருத்தில் கொண்டு, விஞ்ஞானிகள் இந்த வாயுக்களை உறிஞ்சி பயனுள்ள பொருட்களாக மாற்றுவதற்கான புதுமையான முறைகளை ஆராய முயற்சிக்கின்றனர். கார்பன் வாயுவை ஈர்த்து அதனை மாற்றுவதற்கான இரட்டை பங்கு வகிக்கக்கூடிய புதிய பொருட்களின் செயல்பாடுகள் குறித்த  கண்டுபிடிப்புகளில் விஞானிகளுக்கு சவாலான பகுதிகளாக உள்ளது.

இத்தகைய சவாலுக்கு விடையளிக்கும் வகையில், ஹைதராபாத்தில் உள்ள இந்திய இரசாயன தொழில்நுட்பக் கழகத்தின் (IICT) கார்பன் பிடிப்பு மற்றும் பயன்பாடு குறித்த தொடர்ச்சியான ஆராய்ச்சிகளில், மீத்தேன் கைப்பற்றக்கூடிய ஒரு கலப்பினப் பொருளைக் கணக்கீட்டு ரீதியாக வடிவமைத்தது மட்டுமல்லாமல், அதை உயர் தூய்மையான ஹைட்ரஜனாக மாற்றும் ஊக்கியாகவும் செயல்படுகிறது. ஆனால் கார்பன் டை ஆக்சைடை சிட்டுவில் பிடிப்பதற்கும், எரிபொருள் தரம் இல்லாத பயோஎத்தனாலில் இருந்து உயர் தூய்மையான ஹைட்ரஜனாக மாற்றுவதற்கும், உகந்த தீவிரப்படுத்தப்பட்ட இரசாயன முறையிலான  சீர்திருத்தம் எனப்படும் ஒரு பொறிமுறையின் மூலம் உருவகப்படுத்தப்பட்டு வடிவமைக்கப்பட்டது. இந்த ஆராய்ச்சி தொடர்பான கட்டுரைகள் Elsevier இதழில் Chemical Engineering and processing பகுதியில்  வெளியிடப்பட்டுள்ளது.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1815616

***************


(Release ID: 1815649) Visitor Counter : 229


Read this release in: English , Urdu , Hindi