அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
சுவிட்சர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் திரு நிக்லாஸ் சாமுவேல் குக்கர் மத்திய அமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங்கை இன்று புதுதில்லியில் சந்தித்தார்
Posted On:
10 APR 2022 5:17PM by PIB Chennai
சுவிட்சர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் திரு நிக்லாஸ் சாமுவேல் குக்கர், மத்திய அறிவியல் தொழில்நுட்பம் ( தனிப்பொறுப்பு) , புவி அறிவியல், பிரதமர் அலுவலகம், பணியாளர் , பொதுமக்கள் குறைதீர்வு, ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளி துறை இணையமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங்கை இன்று புதுதில்லியில் சந்தித்தார். சுகாதாரம், தொலை மருத்துவம், தொழில்நுட்ப முன்னேற்றம் ஆகிய துறைகளில் விரிவான ஒத்துழைப்பு குறித்து இருவரும் விவாதித்தனர்.
இந்தியாவின் புதிய கல்வி கொள்கை மீது மிகுந்த ஆர்வம் காட்டிய திரு குக்கர், அதன் அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ள விருப்பம் தெரிவித்தார்.மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் உருவாக்கியுள்ள 25 தொழில்நுட்ப மையங்கள் குறித்து அவர் ஆர்வம் காட்டினார்.
இந்தியாவும், சுவிட்சர்லாந்தும் பாரம்பரியமாக பரஸ்பரம் நம்பிக்கை மற்றும் நட்புறவை வைத்துள்ள நாடுகள் என்பதால், பரஸ்பர ஒத்துழைப்புக்கு வசதியாக உள்ளது என்று டாக்டர் ஜித்தேந்திர சிங் கூறினார்.
சுவிட்சர்லாந்தில் இருந்து உயர்மட்டக்குழு வரும் அக்டோபரில் இந்தியா வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பரஸ்பர நலன் சார்ந்த இருதரப்பு உறவுகளை உச்சத்துக்கு கொண்டு செல்ல இது உதவும்.
2018-ம் ஆண்டு பிரதமர் திரு நரேந்திர மோடி உலகபொருளாதார அமைப்பு மாநாட்டில் உரையாற்றிய போது, அவருடன் தாம் டாவோஸ் வந்ததையும், அங்கு தமக்கு வழங்கப்பட்ட விருந்தோம்பலையும் டாக்டர் ஜித்தேந்திர சிங் நினைவு கூர்ந்தார்.
****
(Release ID: 1815440)
Visitor Counter : 218