அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

சமோலி பேரழிவின் காரணத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்

Posted On: 08 APR 2022 2:34PM by PIB Chennai

உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள சமோலி மாவட்டத்தில் 200-க்கும் அதிகமான உயிர்கள் மற்றும் கணிசமான பொருளாதார இழப்புக்கு வழிவகுத்த பயங்கர பனிப்பாறை சரிவுக்கு சுமார் ஒரு வருடத்திற்குப் பிறகு, பேரழிவுக்கான காரணத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

பேரழிவு ஏற்படுவதற்கு முன்பு இப்பகுதியின் நிலத்திற்கடியே மாற்றங்கள் ஏற்பட்டதையும், பாறை-பனி விலகல் தன்மை உருவானதையும் அவர்கள் கண்டறிந்தனர்.

பின்வாங்கும் இமயமலைப் பனிப்பாறைகள் மற்றும் நிலையற்ற சரிவுகளுடன் தொடர்புடைய உருகுதல் ஆகியவை பருவமழையின் போது பெய்யும் மழையினால் அல்லது இப்பகுதியில் ஏற்படும் நில அதிர்வு காரணமாக நிலச்சரிவைத் தூண்டும். மேலும், பனிப்பாறை சரிவுகள் உலகெங்கிலும் உள்ள மலைப்பகுதிகளில் கீழ்நோக்கி உள்ள மக்களையும் உள்கட்டமைப்பையும் அச்சுறுத்தலாம். இதனால் நில அதிர்வு மற்றும் பனிப்பாறை நிலை குறித்த தொடர் கண்காணிப்பு இப்பகுதியில் தேவைப்படுகிறது.

வாடியா இன்ஸ்டிடியூட் ஆப் ஹிமாலயன் ஜியாலஜி நிறுவப்பட்டதில் இருந்து, இத்தகைய பேரழிவின் பின்னணியில் உள்ள செயல்முறைகளைப் புரிந்துகொள்வதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதோடு இமயமலை பனிப்பாறைகளுக்கு அருகில் உள்ள நில அதிர்வு நிலையங்களின் செயல்களைக் கண்டறிவதில் கவனம் செலுத்துகிறது. இந்த செயல்முறையின் ஒரு பகுதியாக, பிப்ரவரி 7, 2021 அன்று நடந்த பேரழிவின் பின்னணியில் உள்ள காரணங்களைக் கண்டறிய முயற்சித்துள்ளனர்.

ஒன்பது விஞ்ஞானிகளைக் கொண்ட குழு பனிச்சரிவு மண்டலத்தின் செயற்கைக்கோள் படங்களை பகுப்பாய்வு செய்து ஆய்வு மேற்கொண்டனர். சயின்டிஃபிக் ரிப்போர்ட்ஸ் இதழில் இது குறித்து வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1814787

----


(Release ID: 1814925) Visitor Counter : 135
Read this release in: Urdu , English , Hindi , Kannada